• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தமிழக அரசு – ஆளுநர் மோதலுக்கு சுமுக தீர்வு காணாவிட்டால் உச்ச நீதிமன்றம் தலையிட நேரிடும்: நீதிபதிகள் | SC Warns Of Intervention Amid TN Govt-Guv Deadlock Over VC Appointments

GenevaTimes by GenevaTimes
January 18, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
தமிழக அரசு – ஆளுநர் மோதலுக்கு சுமுக தீர்வு காணாவிட்டால் உச்ச நீதிமன்றம் தலையிட நேரிடும்: நீதிபதிகள் | SC Warns Of Intervention Amid TN Govt-Guv Deadlock Over VC Appointments
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: ஆளுநருக்​கும், தமிழக அரசுக்​கும் இடையிலான மோதல் போக்கு விவகாரத்​தில் நீங்களே சுமுக தீர்வு காணா​விட்டால், நாங்கள் தலையிட்டு தீர்வு காண் ​போம் என்று உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் அறிவுறுத்தி உள்ளனர். விசா​ரணையை அடுத்த வாரத்​துக்கு தள்ளி​வைத்​த நீதிபதிகள், அன்றைய தினம் இந்த வழக்​கில் இறுதி விசாரணை நடைபெறும் என்று திட்​ட​வட்​டமாக தெரி​வித்​தனர்.

தமிழக ஆளுநராக ஆர்.என்​.ரவி கடந்த 2021-ம் ஆண்டு நியமிக்​கப்​பட்​டார். அப்போ​திருந்தே, தமிழக அரசுக்​கும், அவருக்​கும் மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்தி மொழி, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை ஆகிய​வற்றுக்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரி​வித்து வரும் நிலை​யில், அதற்கு ஆதரவான கருத்துகளை ஆளுநர் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார்.

தமிழக அரசு தயாரித்து வழங்​கும் ஆளுநர் உரையை சட்டப்​பேர​வை​யில் வாசிக்​காமல், சில பகுதிகளை நீக்கி​யும், சேர்த்​தும் படித்து சர்ச்​சையை ஏற்படுத்​தினார். அவை நிகழ்ச்​சிகளில் பங்கேற்​காமல் வெளி​யேறினார். தமிழகத்​தில் அரசு நிகழ்ச்​சிகளின் தொடக்​கத்​தில் தமிழ்த்​தாய் வாழ்த்​தும், நிறைவாக தேசிய கீதமும் பாடப்​பட்டு வரும்நிலை​யில், நிகழ்ச்​சி​யின் தொடக்​கத்​தி​லும் தேசிய கீதம் பாட வேண்​டும் என்று வலியுறுத்தி வருகிறார்.

இதற்​கிடையே, சட்டப்​பேர​வை​யில் நிறைவேற்​றப்​படும் மசோதாக்கள் மற்றும் பல்வேறு திட்​டங்​களுக்கான அரசாணை​களுக்கு ஒப்புதல் அளிக்​காதது உள்ளிட்ட பிரச்​சினை​களுக்காக தமிழக ஆளுநர் ஆர்.என்​.ரவிக்கு எதிராக உச்ச நீதி​மன்​றத்​தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது.

துணைவேந்தர் நியமனம்: இதேபோல, தமிழகத்​தில் உள்ள பல்கலைக்​கழகங்​களில் துணைவேந்​தர்களை நியமிக்​கும் விவகாரம் தொடர்​பாக​வும் தமிழக அரசு வழக்கு தொடர்ந்​துள்ளது. உச்ச நீதி​மன்ற நீதிப​திகள் ஜே.பி.பர்​திவாலா, ஆர்.ம​காதேவன் அமர்​வில் இந்த வழக்​குகள் நேற்று விசா​ரணைக்கு வந்தன. அப்போது நடந்த வாதம்: மத்திய அரசு தரப்​பில் ஆஜ ரான அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்​கடரமணி: ஆளுநருக்கு எதிரான வழக்​குகளை ஒரு வாரத்​துக்கு தள்ளிவைக்க வேண்​டும்.

நீதிப​தி​கள்: ஆளுநருக்​கும், தமிழக அரசுக்​கும் இடையிலான மோதல் போக்கு விவகாரங்​களில் தீர்வு காணப்​பட்​டுள்ளதா, அல்லது பழைய நிலையே தொடர்​கிறதா? தமிழக அரசு தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர்கள் பி.வில்​சன், அபிஷேக் சிங்வி: ஆளுநருக்​கும், தமிழக அரசுக்​கும் இடையிலான மோதல் போக்கு தொடர்​கதை​யாகவே உள்ளது. இன்னும் முடிவுக்கு வரவில்லை.

தற்போதுகூட துணைவேந்​தர்கள் நியமனத்​தில் பிரச்​சினை எழுந்​துள்ளது. தமிழக அரசின் அனைத்து அதிகாரங்​களி​லும் ஆளுநர் தலையிடு​கிறார். இதில் உச்ச நீதி​மன்றம் தலையிட்ட பிறகும், அவரது போக்​கில் முன்னேற்றம் இல்லை. துணைவேந்​தர்கள் நியமனம் தொடர்பான கூடுதல் மனுவை​யும் இந்த வழக்​குடன் சேர்த்து விசா​ரித்து, ஆளுநர் தரப்​பில் பதில் அளிக்க நோட்​டீஸ் பிறப்​பிக்க வேண்​டும். இவ்வாறு வாதம் நடந்​தது.

இதையடுத்து நீதிப​தி​கள், ‘‘தமிழக அரசின் இந்த கூடுதல் மனுவுக்கு தனியாக நோட்​டீஸ் பிறப்​பிக்க வேண்​டியது இல்லை. இந்த வழக்​கோடு சேர்த்து விசா​ரிக்​கப்​படும். மேலும், ஆளுநருக்​கும், தமிழக அரசுக்​கும் இடையிலான மோதல் போக்கு விவகாரத்​தில் நீங்களே சுமுக தீர்வு காணா​விட்​டால், நாங்கள் தலையிட்டு தீர்வு காண்​போம்’’ என்று ஆளுநருக்​கும், தமிழக அரசுக்​கும் அறிவுறுத்தி விசா​ரணையை அடுத்த வாரத்​துக்கு தள்ளி​வைத்​தனர். அன்றைய தினம் இந்த வழக்​கில் இறுதி விசாரணை நடைபெறும் என்று திட்​ட​வட்​டமாக தெரி​வித்​துள்ளனர்.

ஏற்கெனவே உத்தரவு: தமிழக அரசு – ஆளுநர் மோதல் போக்கு தொடர்பான வழக்கு ஏற்கெனவே உச்ச நீதி​மன்​றத்​தில் அப்போதைய தலைமை நீதிபதி டி.ஒய்​.சந்​திரசூட் அமர்​வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி, ‘‘நிலுவை​யில் உள்ள மசோதாக்​களுக்கு ஒப்புதல் அளிப்​ப​தில் தமிழக முதல்​வருக்​கும், ஆளுநருக்​கும் இடையிலான பிரச்​சினை​யில் ஒவ்வொரு முறை​யும் உச்ச நீதி​மன்றம் தலையிட வேண்​டும் என ஆளுநர் எதிர்​பார்ப்பது ஏன்?’’ என்று கேள்வி எழுப்​பினார். ‘‘இரு​வருக்​கும் பரஸ்​பரம் சுமுக உறவு இருந்​தால்​தான் தீர்வு கிடைக்​கும். ஆளுநர் தரப்​பில் இருந்து சில முன்னேற்​றங்களை எதிர்​பார்க்​கிறோம். முதல்​வரும், ஆளுநரும் சந்தித்து பேசி இந்த பிரச்​சினைகளை முடிவுக்கு கொண்டுவர வேண்​டும்’’ என்று அறிவுறுத்​தினார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநரை சந்திக்க முதல்வர் தயாராக இருப்​பதாக தமிழக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது. ஆளுநரும் ​முதல்​வருக்கு அழைப்பு ​விடுத்​தார். இதையடுத்து, ​முதல்​வர் ஸ்​டா​லின் மற்றும் துரை​முரு​கன் உள்​ளிட்ட அமைச்​சர்கள் ராஜ்பவன் சென்று ஆளுநர் ஆர்​.என்​.ர​வியை சந்​தித்​தது குறிப்​பிடத்​தக்​கது.



Read More

Previous Post

அநுர அரசின் இனவாதத்தை அம்பலப்படுத்திய கஜேந்திரகுமார் எம்.பி.

Next Post

நேபாளத்தின் ஒரே கோடீஸ்வரர்… யார் இந்த பினோத் சவுத்ரி?

Next Post
நேபாளத்தின் ஒரே கோடீஸ்வரர்… யார் இந்த பினோத் சவுத்ரி?

நேபாளத்தின் ஒரே கோடீஸ்வரர்... யார் இந்த பினோத் சவுத்ரி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin