சென்னை, பிரபல ஜோதிடர் ரத்தன் பண்டிட், அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில்துறை பிரபலங்க ளுக்கு பல ஆண்டுகளாக ஜோதிட ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடர்
இவர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிடராக இருந்து முக்கிய ஆலோசனைகளை வழங்கியவர் என்ற பெருமையையும் பெற்றவர். அதேபோல் முதல்-அமைச்சர் விஜய்யுடனும் நீண்டகாலமாக நெருக்கமாக இருந்து வருகிறார்.
சமீபத்திய தமிழக சட்டசபை தேர்தலின் போது அவரது ஜோதிட கணிப்பு உலகம் முழுவதும் பேசுபொருளானது. தேர்தல் ஆணையம் காலை 10 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று அறிவித்து இருந்த நிலையில், அதற்கு முன்பாகவே காலை 9 மணியளவில் பூங்கொத்துடன் விஜய்யை நேரில் சந்தித்து,”வெற்றிக்கு வாழ்த்துகள்” என்று கூறி வாழ்த்து தெரிவித்தார்.



