• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி – முழு விவரம் | SIR in 12 states from tomorrow

GenevaTimes by GenevaTimes
October 27, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் இன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி – முழு விவரம் | SIR in 12 states from tomorrow
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


புதுடெல்லி: தமிழகம், புதுச்சேரி, கேரளா உட்பட நாடு முழுவதும் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி இன்று தொடங்குகிறது.

இதுதொடர்பாக டெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் கூறியதாவது: இந்தியாவில் கடந்த 1951 முதல் 2004 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணி 8 முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடைசியாக 2002-04 காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. சுமார் 21 ஆண்டுகளுக்கு பிறகு, பிஹார் மாநிலத்தில் சமீபத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த வகையில்,தமிழகம், புதுச்சேரி, கேரளா, அந்தமான் – நிகோபர், லட்சத்தீவு, சத்தீஸ்கர், கோவா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்குவங்கத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறும். தமிழகத்தில் 6.41 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 68,467 வாக்குச்சாவடிகள் உள்ளன. புதுச்சேரியில் 10.21 லட்சம் வாக்காளர்கள், 962 வாக்குச்சாவடிகள் உள்ளன. 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 51 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.

திருத்தப் பணி நடைபெற உள்ள 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் அக்.27-ம் தேதி (நேற்று) நள்ளிரவுடன் வாக்காளர் பட்டியல் முடக்கப்படும். 28-ம் தேதி (இன்று) முதல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கப்படும். இதன்படி அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய படிவங்கள் வழங்கப்பட்டு விவரங்கள் சேகரிக்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுள்ள புதிய வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். தகுதி இல்லாத வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். குறிப்பாக இடம்பெயர்ந்தவர்கள், ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ளவர்கள், உயிரிழந்தவர்கள், வெளிநாட்டினரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படும்.

திருத்தப் பணியின்போது, ஆதார் அட்டை ஓர் அடையாள ஆவணமாக மட்டுமே ஏற்கப்படும். குடியுரிமை, பிறந்த தேதிக்கான சான்றாக ஏற்கப்படாது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் ஒரு தேர்தல் அலுவலர் (பிஎல்ஓ) பணியில் ஈடுபடுவார். அவர் வீடு வீடாகச் சென்று, படிவங்களை வழங்கி, வாக்காளர்களின் விவரங்களை சேகரிப்பார். ஒவ்வொரு பிஎல்ஓவும் ஒரு வீட்டுக்கு 3 முறை வருவார். ஆன்லைன் வாயிலாகவும் படிவங்களை சமர்ப்பிக்கலாம். அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. ஆனால், மாநில மக்களின் குடியுரிமை ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டுள்ளதால், அங்கு சிறப்பு தீவிர திருத்தப் பணி நடத்த அவசியம் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.



Read More

Previous Post

மாமனாரின் துப்பாக்கிச் சூட்டில் கான்ஸ்டபிள் பலி

Next Post

IND vs PAK | “சாம்பியன் அணிக்கு கோப்பையைக் கொடுக்காமல் மறுப்பது இதுதான் முதல் முறை” – பிரஸ் மீட்டில் சூர்யகுமார் யாதவ் காட்டம்! | விளையாட்டு

Next Post
IND vs PAK | “சாம்பியன் அணிக்கு கோப்பையைக் கொடுக்காமல் மறுப்பது இதுதான் முதல் முறை” – பிரஸ் மீட்டில் சூர்யகுமார் யாதவ் காட்டம்! | விளையாட்டு

IND vs PAK | "சாம்பியன் அணிக்கு கோப்பையைக் கொடுக்காமல் மறுப்பது இதுதான் முதல் முறை" - பிரஸ் மீட்டில் சூர்யகுமார் யாதவ் காட்டம்! | விளையாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin