• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தமிழகத்தில் விரைவில் மின்சார ஆட்டோ, டாக்ஸி வாகனங்களுக்கு 500 இடங்களில் பேட்டரி மாற்று, ‘சார்ஜிங்’ மையங்கள் | Battery replacement and charging centers for EV

GenevaTimes by GenevaTimes
July 14, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தமிழகத்தில் விரைவில் மின்சார ஆட்டோ, டாக்ஸி வாகனங்களுக்கு 500 இடங்களில் பேட்டரி மாற்று, ‘சார்ஜிங்’ மையங்கள் | Battery replacement and charging centers for EV
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தமிழகத்​தில் மின்​சார ஆட்​டோ, டாக்​ஸிகளுக்கு 500 இடங்​களில் பேட்​டரி மாற்று மற்​றும் ‘சார்​ஜிங்’ மையங்​கள் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக மின்​வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

தமிழகத்​தில் சுற்​றுச்​சூழலைப் பாது​காக்​கும் நோக்​கிலும், தற்​போதைய சூழல் மாற்​றங்​கள் மற்​றும் வளர்ந்து வரும் தொழில்​நுட்​பங்​களுக்கு ஏற்ப தூய்​மை​யான மற்​றும் நிலைத்த நகர்ப்​புற போக்​கு​வரத்தை மேம்​படுத்​தும் நோக்​கத்​தி​லும் நடவடிக்​கைளை தமிழக அரசு மேற்​கொண்டு வரு​கிறது. இதன் ஒருபகு​தி​யாக, தமிழக அரசு கடந்த 2023-ம் ஆண்டு திருத்​திய மின் வாக​னக் கொள்​கையை வெளி​யிட்​டது. மின்​வாகன உற்​பத்​தித் துறை​யில் ரூ.50 ஆயிரம் கோடிக்கு முதலீடு​கள் மற்​றும் 1.50 லட்​சம் வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​கு​வது இந்த கொள்​கை​யின் முக்​கிய நோக்​க​மாகும்.

அதன்​படி, மின்​சார வாக​னங்​களுக்கு சாலை வரி விலக்​கு, பதிவுக் கட்​ட​ணம் மற்​றும் அனு​மதி கட்​ட​ணம் தள்​ளு​படி போன்ற சலுகைகள் இந்த ஆண்டு இறு​தி வரை வழங்க அனு​ம​திக்​கப்​பட்​டது. மேலும் மின்​சார வாக​னப் பயன்​பாட்டை அதி​கரிக்​கும் நோக்​கில் மின்​னேற்ற (சார்​ஜிங்) நிலை​யங்​கள், பொது மின்கல (பேட்​டரி) மாற்று நிலை​யங்​களுக்​கான ஊக்​கச் சலுகைகள் வழங்​கப்​படும் என தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்​து, தமிழகத்​தில் பொது இடங்​களில் சார்​ஜிங் நிலை​யங்​கள் அமைப்​ப​தற்​கான பணி​களை தமிழ்​நாடு மின்​சார வாரி​யம் மேற்​கொண்டு வரு​கிறது. கடந்த 2023-ம் ஆண்டே 9 இடங்​களில் சார்​ஜிங் நிலை​யங்​கள் அமைக்​கும் பணி​கள் தொடங்​கப்​பட்​டது. தனி​யார் பொது பங்​களிப்​புடன் இந்த திட்​டம் செயல்​படுத்​தப்​பட்ட நிலை​யில் பெரும்​பாலான பணி​கள் முடிக்​கப்​பட்டு விரை​வில் அவை பயன்​பாட்​டுக்கு வர உள்​ளன.

இதற்​கிடையே, சென்​னை​யில் முதற்​கட்​ட​மாக 120 மின்​சார பேருந்​துகள் பொது பயன்​பாட்​டுக்​குக் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. இந்த ஆண்டு இறு​திக்​குள் 625 மின்​சார பேருந்​துகள் பயன்​பாட்​டுக்கு கொண்​டு​வரப்பட உள்​ளன. இதுத​விர, தனி நபர் மின் வாக​னப் பயன்​பாட்டை அதி​கரிக்​க​வும், போக்​கு​வரத்து சேவை​களில் மின் வாக​னப் பயன்​பாட்டை அதி​கரிக்​க​வும் நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன.

அந்த வகை​யில் தூய்​மை​யான மற்​றும் நிலைத்த நகர்ப்​புற போக்​கு​வரத்தை மேம்​படுத்​தும் வகை​யில் தமிழ்​நாடு பசுமை எரிசக்தி கழகம் மற்​றும் இந்​திய போக்​கு​வரத்து மற்​றும் மேம்​பாட்டு கொள்கை நிறு​வனம் இடையே புரிந்​துணர்வு ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி​யுள்​ளது. இந்த ஒப்​பந்​தத்​தின்​படி இந்​திய போக்​கு​வரத்து மற்​றும் மேம்​பாட்டு கொள்கை நிறு​வனம் ஆலோ​சனை​களை வழங்​கும். அதனை தமிழ்​நாடு பசுமை எரிசக்​திக் கழகம் செயல்​படுத்​தும்.

இந்த ஒப்​பந்​தத்​தின்​படி இந்​திய போக்​கு​வரத்து மற்​றும் மேம்​பாட்டு கொள்கை நிறு​வனம் பல்​வேறு இடங்​களில் வெற்​றிகர​மாக செயல்​படுத்​தப்​பட்ட திட்​டங்​கள் குறித்​தும் அதனை தமிழகத்​தில் எப்​படி செயல்​படுத்​து​வது என்​பது குறித்​தும் ஆலோ​சனை​களை வழங்​கும்.

இந்த ஒப்​பந்​தத்​தில், முக்​கிய பகு​தி​களில் பொது பயன்​பாட்​டுக்​காக ஒரு தனித்​து​வ​மான மின்​சார வாகன சார்​ஜிங் செயலியை உரு​வாக்​குதல், மின் வாகன கொள்​கைகள் மற்​றும் சந்தை தகவல்​களுக்கு ஒருங்​கிணைந்த வலை​தளத்தை உரு​வாக்​குதல், நிலம் ஒருங்​கிணைப்பு மற்​றும் செயல்​திறன் மதிப்​பீடு​களுக்​கான திட்​ட​மிடல், மற்​றும் நகர அடிப்​படையி​லான விரி​வாக்​கக் கூடிய மின் வாகன கட்​டமைப்பு வரைபடங்​களை தயாரித்​தல் போன்ற பணி​கள் மேற்​கொள்​ளப்பட உள்​ளன.

இதனால் தமிழ்​நாட்​டில் நிலைத்த நகர் போக்​கு​வரத்து காலநிலை மாற்ற நடவடிக்​கைகள் மற்​றும் பசுமை ஆற்​றல் கண்​டு​பிடிப்​பு​கள் அதி​கரிக்​கும். எதிர்​காலத்​தில் பொது​மக்​களுக்கு சிறந்த மின்​சார போக்​கு​வரத்து சூழல் உரு​வாகும்.

இதுகுறித்து மின் வாரிய அதி​காரி​கள் கூறிய​தாவது: தமிழகத்​தில் நகர்ப்​புறங்​கள் மற்​றும் நெடுஞ்​சாலைகளில் 500 இடங்​களில் சார்​ஜிங் நிலை​யங்​கள் அமைப்​ப​தற்​கான சாத்​தி​யக்​கூறு ஆய்​வு​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கிறது. இதுத​விர பொதுபோக்​கு​வரத்​தில் ஆட்​டோ, டாக்ஸிபோன்ற சேவை​களில் மின் வாக​னப் பயன்​பாட்டை அதி​கரிக்க நகரங்​களில் பேட்​டரி மாற்று நிலை​யங்​கள் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. டெல்லி போன்ற நகரங்​களில் இந்த திட்​டம் வெற்​றிகர​மாக செயல்​படுத்​தப்​பட்ட நிலை​யில் இதை தமிழகத்​தி​லும் செயல்​படுத்த திட்​ட​மிட்​டுள்​ளோம். ஏற்​கெனவே செயல்​பட்டு வரும் தனி​யார் சார்​ஜிங் நிலை​யங்​களில் ஏற்​படும் பிரச்​சினை​களுக்​குத் தீர்​வு​காண பிரத்​யேக குறைதீர் மையம் அமைக்​கப்பட உள்​ளது. இவ்​வாறு அவர்​கள் கூறினர்.



Read More

Previous Post

இந்திய தடகள வீரர் அவினாஷ் சாப்ளே காயம் | indian athlete avinash sable injured

Next Post

இந்தியாவால் தேடப்படும் முக்கிய நபர் உட்பட 8 காலிஸ்தான் தீவிரவாதிகளை கைது செய்தது அமெரிக்கா | US arrests 8 Khalistani terrorists

Next Post
இந்தியாவால் தேடப்படும் முக்கிய நபர் உட்பட 8 காலிஸ்தான் தீவிரவாதிகளை கைது செய்தது அமெரிக்கா | US arrests 8 Khalistani terrorists

இந்தியாவால் தேடப்படும் முக்கிய நபர் உட்பட 8 காலிஸ்தான் தீவிரவாதிகளை கைது செய்தது அமெரிக்கா | US arrests 8 Khalistani terrorists

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin