• Login
Friday, October 30, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க அரசு புதிய வியூகம்.. நவம்பரில் நடக்கும் முக்கிய மாநாடு..!! | Tamil Nadu Plans November Investment Conversion Conclave to turn ₹1.14 Lakh Crore MoUs into Projects

GenevaTimes by GenevaTimes
October 29, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க அரசு புதிய வியூகம்.. நவம்பரில் நடக்கும் முக்கிய மாநாடு..!! | Tamil Nadu Plans November Investment Conversion Conclave to turn ₹1.14 Lakh Crore MoUs into Projects
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க அரசு புதிய வியூகம்.. நவம்பரில் நடக்கும் முக்கிய மாநாடு..!!

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும், ஏற்கனவே பெறப்பட்ட முதலீட்டு வாக்குறுதிகளை திட்டங்களாக மாற்றும் நோக்கத்துடனும் நவம்பர் மாதத்தில் சிறப்பு முதலீட்டு மாநாடு ஒன்றை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக தொழில்துறை அமைச்சர் ஜெர்மனி நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு ஏற்கனவே முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியுள்ளது, மேலும் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் விஜய் பிரிட்டனுக்கும் சுற்று பயணம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் இதுவரை வந்த முதலீட்டு வாக்குறுதிகளை திட்டங்களாக மாற்றும் நோக்கத்துடன் நவம்பரில் தமிழக அரசு Investment Conversion Conclave-ஐ நடத்த இருக்கிறது.

தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க அரசு புதிய வியூகம்.. நவம்பரில் நடக்கும் முக்கிய மாநாடு..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு இதுவரை 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையெழுத்திட்டு அதன் மூலம் 1.14 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டு உறுதிகளை பெற்றுள்ளது. முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெறும் இந்த மாநாடு பல்வேறு தொழில்துறை நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்கும், அவற்றை நடைமுறைப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கும் மிக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி இந்து ஆங்கில நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

இது தவிர வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் ஜெர்மனி நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். ஜெர்மனியில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்கள், மற்றும் வர்த்தக பிரதிநிதிகளைச் சந்தித்து தமிழகத்தில் நிலவும் தொழில் துறைக்கு சாதகமான சூழல், அரசு வழங்கும் சலுகைகள் மற்றும் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து அவர் எடுத்துரைப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய நாடான ஜெர்மனியுடன் தமிழகம் ஏற்கனவே வலுவான பொருளாதார உறவுகளை கொண்டுள்ள நிலையில், இந்த புதிய பயணம் மற்றும் நவம்பர் மாநாடு மூலம் மேலும் பல புதிய நிறுவனங்களின் முதலீடுகள் தமிழகத்திற்கு வர வழிவகை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெர்மனியை சேர்ந்த பல நிறுவனங்களும் இந்தியாவில் மகாராஷ்ட்ராவுக்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் தான் அதிக தொழில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளன என ஜெர்மன் நாட்டு தூதர் மைக்கேல் ஹேஸ்பர் கூறியுள்ளார். 120க்கும் அதிகமான ஜெர்மன் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அமைச்சரின் பயணம் மேலும் பல முதலீடுகளை ஈர்க்கும் என சொல்லப்படுகிறது.

தொழில்துறையில் சிறந்து விளங்கும் தமிழகத்தில் முதலீடுகளும் உற்பத்தியும் அதிகரிப்பது இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் மாநில பொருளாதார வளர்ச்சியை நிலைநிறுத்தவும் உதவும்.

Share This Article

English summary

Tamil Nadu Plans November Investment Conversion Conclave to turn ₹1.14 Lakh Crore MoUs into Projects

தமிழகத்தில் முதலீடுகளை ஈர்க்க அரசு புதிய வியூகம்.. நவம்பரில் நடக்கும் முக்கிய மாநாடு..!!/ The Tamil Nadu government, led by Chief Minister C. Joseph Vijay, is planning an Investment Conversion Conclave in November to convert signed investment MoUs into on-ground industrial projects.

Story first published: Thursday, October 29, 2026, 12:22 [IST]

Other articles published on Oct 29, 2026

Read More

Previous Post

Yelagiri: ஏலகிரி மலை லாட்ஜில் ரயில்வே பெண் ஊழியர் மர்ம மரணம்! ரூம் போட்ட ஆண் ஊழியர் கைது | Police arrested Railway employee for mysterious death of woman employee in a lodge room

Next Post

மரண பயத்தைப் போக்க தீபாவளிப் பண்டிகை விரதம் | Makkal Osai

Next Post
மரண பயத்தைப் போக்க தீபாவளிப் பண்டிகை விரதம் | Makkal Osai

மரண பயத்தைப் போக்க தீபாவளிப் பண்டிகை விரதம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin