Last Updated:
PM Modi Campaign: தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
வரும் 23ஆம் தேதி தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
தமிழ்நாட்டிற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில், பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி மதுரைக்கு வருகை தருவதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.
மதுரை பாண்டிகோவில் அருகேயுள்ள அம்மா திடல் மைதானத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நடைபெறும் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும், அதில், அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்பட்டது.
பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பே தேசிய ஜனநாயக கூட்டணியை இறுதி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து மதுரை பொதுக்கூட்டத்திற்கு காவல்துறையிடம் அனுமதியும் கோரப்பட்டிருந்த நிலையில், திடீரென கூட்டத்தை மதுரையில் இருந்து சென்னைக்கு மாற்ற பாஜக முடிவு செய்துள்ளது.
Jan 13, 2026 12:30 PM IST
PM Modi Campaign: தமிழகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்… சென்னைக்கு மாற்றம்! – எப்போது தெரியுமா?


