கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி பகுதியில் கனகமூலம் காய் கனி சந்தை உள்ளது. இங்கிருந்து காய் மற்றும் பழங்கள் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. கடந்த 100 ஆண்டுகளுக்கு முன்பு காய்கள் மற்றும் பழங்கள் இங்கு கொள்முதல் செய்யப்பட்டு கேரளாவிற்குக் கொண்டு செல்வதற்காக திருவிதாங்கூர் கனகமூலம் மகாராஜாவால் இந்த சந்தை உருவாக்கப்பட்டது.
அன்றைய காலத்தில் சிறியதாக ஆரம்பிக்கப்பட்ட சந்தை தற்போது 300க்கும் மேற்பட்ட கடைகளுடன் இயங்கி வருகிறது. கனகம் என்றால் தங்கம் என்றும், மூலம் என்பது 1885 – 1924க்கு இடைப்பட்ட காலத்தில் ஆட்சியில் இருந்த திருவிதாங்கூரின் மன்னர் மூலம் திருநாள் ராம வர்மாவைக் குறிக்கும்.
இந்த கனக மூலம் சந்தைக்கு சொந்தமான நிலம் அரசரின் துணைவியாருக்குச் சொந்தமானது என்று கல்வெட்டுகள் குறிப்பிடுகிறது. மன்னர் மூலம் திருநாள் ராம வர்மாவின் பெயரால் சந்தைக்குப் பெயர் சூட்டப்பட்டது என்றாலும் அரசனின் மனைவி குடும்பத்திற்குச் சொந்தமான இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இரட்டிப்பு லாபம் தரும் கேரட்… நீலகிரியில் எப்படி சாகுபடி பண்ணுறாங்க தெரியுமா..?
மூலம் திருநாள் ராம வர்மாவின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த சந்தை நிறுவப்பட்டதாகக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து கனகமூலம் சந்தை வியாபாரி கண்ணன் கூறுகையில், “நாகர்கோவில் வடசேரி கனகமூலம் சந்தை நூற்றாண்டு பாரம்பரியம் மிக்க சந்தை. இந்த சந்தைக்கான இடங்களை திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் ஏழை எளிய மக்களது வாழ்வாதாரத்திற்காக வழங்கினார். இந்த சந்தையின் மூலம் நேரடியாகச் சுமார் 10 ஆயிரம் குடும்பங்களும் மறைமுகமாக சுமார் 20 ஆயிரம் குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு நாங்கள் பாரம்பரியமாக மூன்று தலைமுறைகளாகக் கடைகள் வைத்து வாழ்ந்து வருகிறோம். குமரி மாவட்டத்திலே மிகப்பெரிய சந்தை இதுதான், இடப்பற்றாக்குறையால் இதிலிருந்து தான் பல கிளைகள் உருவாகி அப்ட்டா மார்க்கெட் போன்ற பல சந்தைகள் உருவானது. கனகமூலம் சந்தை என்பது இந்திய அளவில் பேசப்பட்ட மிகப்பெரிய சந்தை ஆகும். அரசு இந்த சந்தையை மேம்படுத்திப் பல வசதி வாய்ப்புகள் ஏற்படுத்தித் தர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
