தமிழ்நாட்டில், பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ் பென்ஸ், ஜாகுவார், ஆடி உள்ளிட்ட சொகுசு கார்களை வாங்குவோர் எண்ணிக்கை ஓரே ஆண்டில் 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
பல வெளிநாட்டு கார் நிறுவனங்கள் இந்தியாவில் கார்களை தயாரித்து வந்தாலும், சிலரின் விருப்பம் எப்போதும் சொகுசு கார்கள்தான். அதிவேகம், சொகுசான இருக்கைகள் என இவ்வகை கார்கள் மக்களின் தேர்வாக உள்ளன. 30 லட்ச ரூபாய்க்கு மேல் விற்கப்படும் கார்கள் சொகுசு வகை கார்களில் வருகின்றன.
2022-23 ஆம் நிதி ஆண்டில் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 5,797 கார்கள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இது கடந்த ஆண்டு 46.2% சதவிகிதம் அதிகரித்து 8,475 ஆக உயர்ந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 1,668 கார்களும், கோவையில் 510 கார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. மதுரையில் 110, நெல்லையில் 95, திருச்சியில் 67 சொகுசு கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கார்களைப் பொறுத்தவரையில் பிஎம்டபிள்யூ காரே மக்களின் அதீத விருப்பமாக உள்ளது. 2023-24 ஆம் ஆண்டில், சென்னை மண்டலத்தில் 715 பிஎம்டபிள்யூ கார்களும், கோவை மண்டலத்தில் 226ம், மதுரையில் 61ம், நெல்லையில் 34ம், திருச்சியில் 33 கார்களும் பதிவு செய்யப்பட்டுள்ன. அடுத்தப்படியாக மெர்சிடிஸ் பென்ஸ் கார்களை மக்கள் வாங்கியுள்ளனர். சென்னையில் 706, கோவையில் 203, மதுரையில் 35, நெல்லையில் 45, திருச்சியில் 27 கார்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதேபோல மூன்றாவது இடத்தில் ஜாகுவார் லேண்ட் ரோவரும்,
76 பார்ஷ் கார்களும், 66 ஆடி கார்களும், 7 பென்ட்லே கார்களும், 6 லம்போகிர்னியும், 5 ரோல்ஸ் ராய்ஸ்ஸும், 4 மிசயார்டியும் ஆஸ்டன் மார்ட்டின், ஃபெராரி தலா ஒரு காரும் விற்பனையாகியுள்ளது.
வசதிப்படைத்தவர்கள் மட்டுமே சொகுசு கார்களை வாங்கி வந்த நிலையில், பல இளம் தொழிலதிபர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்கள், புத்தாக்க தொழில் தொடங்குவோர், மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், கார்ப்பரேட் ஊழியர்களின் கவனமும் சொகுசு கார்கள் பக்கம் திரும்பியுள்ளது.
இதையும் படிங்க: 3 KWH பேட்டரியுடன் Jeet X ZE எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ள iVOOMi நிறுவனம்.!!
கொரோனாவுக்கு பிறகு, இளைஞர்களின் தேர்வு சொகுசு கார்களாக உள்ளன. குறிப்பாக தற்போது சொகுசு கார்களை வாங்குவோரில் 70 சதவிகிதம் பேர் 50 வயதுக்கு குறைவானவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
