• Login
Wednesday, February 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் தகவல் | Budget allocation of Rs 6626 crore for railway projects to be implemented in Tamil Nadu

GenevaTimes by GenevaTimes
February 4, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ரயில்வே திட்டங்களுக்கு பட்ஜெட்டில் ரூ.6,626 கோடி நிதி ஒதுக்கீடு: மத்திய அமைச்சர் தகவல் | Budget allocation of Rs 6626 crore for railway projects to be implemented in Tamil Nadu
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: மத்திய பட்ஜெட்​டில், தமிழக ரயில்வே திட்​டங்​களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரி​வித்​துள்ளார்.

இதுகுறித்து, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், டெல்​லி​யில் இருந்து காணொலி வாயி​லாக, செய்தியாளர்​களிடம் கூறிய​தாவது: மத்திய பட்ஜெட்​டில், இந்திய ரயில்​வே​யில் பாது​காப்பு கட்டமைப்புகளை மேம்​படுத்து​வதற்​காக, ரூ.1 லட்சத்து 16 கோடியே 514 கோடி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. சிக்​னல், தொலை​தொடர்பு துறை, தண்ட​வாளம் மேம்​பாடு உட்பட பல பணிகளுக்கு நிதி ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

பட்ஜெட்​டில், தமிழகத்​தில் நடக்​கும் ரயில்வே திட்​டங்​களுக்கு ரூ.6,626 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. இது கடந்த 2009–14-ம் ஆண்டு​களோடு ஒப்பிடும்​போது 7.5 மடங்கு அதிக​மாகும். முந்தைய பட்ஜெட்​டில் தமிழகத்​துக்கு ரூ.6,362 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டது. கடந்த 2014-ல் இருந்து 1,303 கி.மீ. தொலை​வுக்கு பாதை அமைக்​கப்​பட்​டுள்​ளது. 2014-ம் ஆண்டு முதல் இதுவரை 2,242 கி.மீ. தொலைவு ரயில் பாதைகள் மின்​மய​மாக்​கப்​பட்​டுள்ளன. மேலும், 22 ரயில் பாதை திட்​டங்கள் ரூ.33,467 கோடி​யில் நடைபெறுகின்றன.

இதுதவிர எழும்​பூர், மதுரை, ராமேசுவரம் உட்பட 5 ரயில் நிலை​யங்களை ரூ.1,896 கோடி​யில் சர்வதேச தரத்​தில் மேம்​படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதுதவிர, அம்ரித் பாரத் திட்​டத்​தின்​கீழ், 77 ரயில் நிலை​யங்கள் ரூ.2,948 கோடி​யில் மேம்​படுத்​தப்​பட்டு வருகின்றன. தமிழகத்​தில் 8 வந்தே பாரத் ரயில் கள் தற்போது இயக்​கப்​படு​கின்றன. கூடுதல் ரயில்​களை​யும் இயக்கி வருகிறோம். வரும் 4 முதல் 5 ஆண்டு​களில் புதிய தண்ட​வாளங்கள் அமைக்​கப்​படும். தமிழகத்​தில் நடைபெறும் திட்​டங்​களுக்கு 3,389 ஹெக்டர் நிலம் தேவை. இதுவரை​ 25 சதவீத நிலம் மட்டுமே கையகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. எனவே, ரயில்​பாதை திட்​டங்களை விரைந்து முடிக்க மாநில அரசின் ஆதரவு தேவை.

இந்த பட்ஜெட்​டில் 50 புதிய நமோ பாரத் ரயில்கள் இயக்க அனும​திக்​கப்​பட்​டுள்​ளது. இதுதவிர பட்ஜெட்​டில் 100 புதிய அம்ரித் பாரத் ரயில்​கள், 200 புதிய வந்தே பாரத் ரயில்கள் இயக்க அனும​திக்​கப்​பட்​டுள்​ளது. ரூ.40,000 கோடி மதிப்​பிலான புதிய திட்​டப்​பணிகள் அனும​திக்​கப்​பட்​டுள்ளன. இதேபோல, கேரளா​வுக்கு ரூ.3,042 கோடி​, கர்நாடகாவுக்கு ரூ.7,564 கோடி​ ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. இவ்வாறு அவர் பேசினார்.

தெற்கு ரயில்​வே கூடுதல் பொது​மேலாளர் கவுசல் கிஷோர் கூறும்​போது, “சென்னை கடற்கரை – எழும்​பூர் இடையே 4-வது புதிய ரயில் பாதை பணி, அடுத்த 2 மாதங்​களில் முடி​யும். அதுபோல, 77 ரயில் நிலை​யங்​களில் மேம்​பாட்டு பணிகள் நடைபெறுகின்றன. ரயில் விபத்துகளை தவிர்க்க, 1,460 கி.மீ. தொலை​வுக்கு ‘கவச்’ தொழில்​நுட்பம் நிறுவ திட்​ட​மிட்​டப்​பட்​டது. முதல்​கட்​ட​மாக, 601 கி.மீ. தொலை​வுக்கு பணிகளை மேற்​கொள்ள இருக்​கிறோம்” என்​றார். சென்​னை ர​யில்வே​ கோட்​ட மேலா​ளர்​ ​விஸ்​வநாத்​ ஈர்​யா உள்ளிட்ட அதிகாரி​கள்​ உடன் இருந்​தனர்​.



Read More

Previous Post

உப்பு இறக்குமதி : அரசாங்கம் வெளியிட்ட அறிவிப்பு

Next Post

வரியை உயர்த்தி அமெரிக்கா தவறு செய்துவிட்டது.. டிரம்புக்கு சீனா எச்சரிக்கை | Makkal Osai

Next Post
வரியை உயர்த்தி அமெரிக்கா தவறு செய்துவிட்டது.. டிரம்புக்கு சீனா எச்சரிக்கை | Makkal Osai

வரியை உயர்த்தி அமெரிக்கா தவறு செய்துவிட்டது.. டிரம்புக்கு சீனா எச்சரிக்கை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin