Last Updated:
சென்னையில் 15 பேரும் , தமிழகத்தில் மற்ற பகுதிகளில் 235 பேரும் தங்கி இருப்பதாக தெரியவருகிறது.
தமிழ்நாட்டில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்கள் 250 பேர் நாளை மறுதினத்துக்குள் வெளியேறும்படி குடியுரிமைத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர்.
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது. இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசு உத்தவிட்டுள்ளது. அதனடிப்படையில், தமிழ்நாட்டில் ‘சார்க்’ அமைப்பு மூலமாகவும், கல்வி மற்றும் மருத்துவ சிகிச்சைக்காகவும் விசா பெற்றுவந்து, தங்கி உள்ளவர்கள் குறித்த கணக்கெடுப்பை மத்திய உளவுப்பிரிவு ஆலோசனையின் பேரில் குடியுரிமைத் துறை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
இதில், சென்னையில் 15 பேர் உட்பட தமிழ்நாடு முழுவதும் பாகிஸ்தானியர்கள் 250 பேர் தங்கி இருப்பது தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் நாளை மறுநாளுக்குள் வெளியேற வேண்டும் என்று குடியுரிமைத்துறை அதிகாரிகள் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கல்வி , மருத்துவ சிகிச்சை , திருமண நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக விசா பெற்று பாகிஸ்தானர்கள் தமிழக வந்திருப்பதும் , அவர்கள் 29ஆம் தேதிக்குள் வெளியேறுகிறார்களா என குடியுரிமை மற்றும் உளவு பிரிவு அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 27, 2025 1:57 PM IST
தமிழகத்தில் உள்ள 250 பாகிஸ்தானியர்கள் நாளை மறுதினத்திற்குள் வெளியேற சம்மன்… சென்னையில் மட்டும் 15 பேர் தங்கியுள்ளதாக தகவல்…


