• Login
Tuesday, November 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தப்பி தவறி கூட நகை கடைக்கு போனால் ‘இதை’ வாங்கிடாதீங்க.. 4 வருடத்தில் எதிர்பாராத மாற்றம்..!! | Thinking of Buying Diamonds This Diwali? Don’t Fall into the Investment Trap as Prices Plunge 82%

GenevaTimes by GenevaTimes
November 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தப்பி தவறி கூட நகை கடைக்கு போனால் ‘இதை’ வாங்கிடாதீங்க.. 4 வருடத்தில் எதிர்பாராத மாற்றம்..!! | Thinking of Buying Diamonds This Diwali? Don’t Fall into the Investment Trap as Prices Plunge 82%
Share on FacebookShare on Twitter


தப்பி தவறி கூட நகை கடைக்கு போனால் ‘இதை’ வாங்கிடாதீங்க.. 4 வருடத்தில் எதிர்பாராத மாற்றம்..!!

ஒரு காலத்தில் பெரும் பணக்காரர்கள் மட்டுமே முதலீடு செய்து வந்த வைர கற்கள் மீதான முதலீடு தற்போது அடித்து உடைக்கப்பட்டு தரைதட்டியுள்ளது. இந்தியா மட்டும் அல்லாமல் உலகம் முழுவதும் ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரம் அதிகளவில் பயன்படுத்தப்படுவது மட்டும் அல்லாமல் உலகளவில் அதிகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டு உள்ளது.

இதனால் செயற்கை வைரம் மட்டும் அல்லாமல் உண்மையான வைரத்தின் மதிப்பும் தரை தட்டியுள்ளது. உதாரணமாக 2022ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆய்வகத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்ட வைரத்தின் விலை ஒரு கேரட்டுக்கு சுமார் 389 டாலராக இருந்தது.

 தப்பி தவறி கூட நகை கடைக்கு போனால் 'இதை' வாங்கிடாதீங்க.. 4 வருடத்தில் எதிர்பாராத மாற்றம்..!!

ஆனால் தற்போது இதன் விலை சுமார் 71 டாலராகக் குறைந்துள்ளது. வெறும் 4 ஆண்டுகளில் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட வைரங்களின் விலை 82 சதவீதம் சரிந்துள்ளது. இந்த மோசமான சரிவுக்கு முக்கியக் காரணம், முதலும் முக்கியமான விஷயம் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரமும், நிஜ வைரத்தின் தன்மையும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருப்பது தான்.

இதை தாண்டி இந்த செயற்கை வைரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை இந்தியாவில் பெரியளவில் அதிகரித்துள்ளது மூலம் சந்தையில் சப்ளை அதிகமாகி விலை குறைய வழிவகுத்துள்ளது. மேலும் தற்போது இந்தியாவின் மொத்த வைர ஏற்றுமதியை பார்க்கும் போது கேரட் அடிப்படையில் பார்க்கும் போது ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட வைரங்களின் பங்கு சுமார் 51 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதே காலக்கட்டத்தில் நிஜ வைரம் அதாவது பாலிஷ் செய்யப்பட்ட வைரத்தின் ஏற்றுமதிக்கு அமெரிக்க அரசு 50 சதவீத வரி விதிக்கப்படும் காரணத்தால் நிஜ வைரத்தின் வர்த்தகம் மோசமான நிலைக்கு இழத்து செல்லப்பட்டு உள்ளது. சரி இப்போது சாமானிய மக்களின் அடிப்படை கேள்வி என்னவென்றால் வைரத்தை வாங்கலாமா..? வேண்டாமா..? என்பது தான்.

அதாவது நீங்கள் தினசரி பயன்பாட்டுக்கோ, அல்லது யாருக்கேனும் பரிசு தர வேண்டுமாயின் ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட வைரத்தை வாங்கலாம். ஆனால் முதலீடாகக் கருதி வாங்குவது என்றால் தவிர்க்க வேண்டும்.

இதேபோல் நிஜ வைரத்தின் மதிப்பும் வேகமாக குறைந்து வருவது மூலம் இதை வாங்குவதும் தவறான முடிவாக இருக்கும். காரணம் இன்று வாங்கிய நிஜ வைரத்தின் மதிப்பு அடுத்த 5 வருடத்தில் குறையவும் வாய்ப்பு உள்ளதால் சமானிய மக்கள் வைரத்தில் முதலீடு செய்வதை தவிர்க்கலாம்.

இந்த தீபாவளிக்கு நீங்கள் வைரம் நகை வாங்கத் திட்டமிட்டால், 3 விஷயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.

1. வைரத்தின் தரத்தை உறுதிப்படுத்தும் கிரேடிங் சான்றிதழை நகை கடையில் கேட்டு வாங்குங்கள்.

2. சந்தையில் வைரத்தின் விலையை தெரிந்துக்கொள்ள குறைந்தபட்சம் 3 நகைக்கடைகளில் ஒரு காரட் வைரத்தின் விலையை செக் செய்துக்கொள்ளுங்கள்.

3. இறுதியாக பழைய வைரத்தைத் விற்பனை செய்வதற்கு என்ன விதிமுறைகள், கட்டுப்பாடுகள் உள்ளது என்பதை தெளிவுப்படுத்திக்கொண்டு வாங்குகள்.

Share This Article

English summary

Thinking of Buying Diamonds This Diwali? Don’t Fall into the Investment Trap as Prices Plunge 82%

Thinking of Buying Diamonds This Diwali? Don’t Fall into the Investment Trap as Prices Plunge 82% — தப்பி தவறி கூட நகை கடைக்கு போனால் ‘இதை’ வாங்கிடாதீங்க.. 4 வருடத்தில் எதிர்பாராத மாற்றம்..!!

Story first published: Tuesday, November 3, 2026, 22:55 [IST]

Other articles published on Nov 3, 2026

Read More

Previous Post

“கணவர் திட்டுவது மட்டுமே குற்றமாகாது” – வரதட்சணை கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

பறிமுதல் செய்யப்பட்ட பிட்காயின் இயந்திரங்கள், 1.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சிகரெட்டுகளை காவல்துறை அப்புறப்படுத்தியது | Makkal Osai

Next Post
பறிமுதல் செய்யப்பட்ட பிட்காயின் இயந்திரங்கள், 1.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சிகரெட்டுகளை காவல்துறை அப்புறப்படுத்தியது | Makkal Osai

பறிமுதல் செய்யப்பட்ட பிட்காயின் இயந்திரங்கள், 1.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சிகரெட்டுகளை காவல்துறை அப்புறப்படுத்தியது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin