ஆனால், அதற்குப் பிறகு நீங்கள் செய்யும் மாற்றங்களுக்கு ஒரு சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும். இந்த செயல்முறை குறித்த தகவல், விதிகள் மற்றும் கட்டணங்கள் பற்றி தெரிந்து கொள்வது எந்தவிதமான குழப்பத்தையும், தாமதங்களையும் தவிர்ப்பதற்கு உதவும். குறிப்பாக, அவசரகால சூழ்நிலைகள் அல்லது கிளைம் சமயத்தில் குழப்பங்கள் ஏற்படாமல் நீங்கள் பார்த்துக் கொள்ளலாம்.
அக்கவுன்ட் திறக்கும்போது நாமினேஷனுக்கான செலவு இலவசம்:
தபால் நிலைய சேமிப்பு திட்ட கணக்கை திறக்கும்போதே உங்களுடைய நாமினி யார் என்ற பெயரை நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில், அப்போது உங்களிடமிருந்து எந்த ஒரு கட்டணமும் வசூலிக்கப்படாது. அக்கவுன்ட் திறப்பதற்கான படிவத்தில் நாமினியின் பெயர் கேட்கப்பட்டுள்ள தகுந்த பிரிவில் நீங்கள் அதனை குறிப்பிட வேண்டும். இவ்வாறு செய்வது அதிக அளவில் பரிந்துரை செய்யப்படுகிறது. ஏனெனில், உங்களுடைய இறப்புக்கு பிறகு நாமினியின் பெயருக்கு எந்த ஒரு சிக்கலும் இல்லாமல் பணம் டிரான்ஸ்ஃபர் செய்யப்படுவதையும், சட்டபூர்வமான பிரச்சனைகளை தடுப்பதற்கும் இது உதவுகிறது.
அக்கவுன்ட் திறந்த பிறகு நாமினியை மாற்றுவது அல்லது நாமினியை நியமிப்பது:
ஒருவேளை அக்கவுன்ட்டை திறந்த சமயத்தில் நீங்கள் நாமினியின் பெயரை குறிப்பிடாமல் இருந்தாலோ அல்லது ஒரு சில காலம் கழித்து ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நாமினியின் பெயரை மாற்ற நினைத்தாலோ இதற்கு உங்களுடைய தபால் நிலைய கிளைக்கு சென்று படிவம்-3ஐ நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இந்த படிவத்தில் நீங்கள் நாமினியின் பெயரை புதிதாக சேர்க்கவோ அல்லது நீக்கவோ அல்லது மாற்றவோ முடியும்.
இந்த மாற்றங்களை செய்வதற்கு தபால் நிலையத்தில் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த தொகையானது அக்கவுன்ட் எண்ணிக்கையின் அடிப்படையில் செலுத்தப்பட வேண்டும். மேலும், நீங்கள் ஏற்படுத்திய மாற்றங்கள் அக்கவுன்ட்டின் பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டு, அடுத்து வரக்கூடிய ஸ்டேட்மென்ட்டுகளில் அது பிரதிபலிக்கும்.
பேமென்ட் செலுத்தும் முறை மற்றும் பிராசசிங் ஆவதற்கான நேரம்:
இந்த நாமினி மாற்றத்திற்கான கட்டணத்தை பணமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட தபால் நிலைய சேமிப்பு மூலமாகவோ நீங்கள் செலுத்தலாம். விண்ணப்பத்தை நீங்கள் பேமென்ட் உடன் சேர்ந்து சமர்பித்தவுடன் தபால் நிலையம் நீங்கள் வழங்கிய ஆவணங்களை சரிபார்த்து, நாமினி விவரங்களை அப்டேட் செய்யும். இது ஒரு சில நாட்களில் நிறைவடையக்கூடிய ஒரு செயல்முறை. எனினும், அப்டேட் உறுதி செய்யப்படும்வரை உங்களுக்கு வழங்கப்பட்ட ரசீதை வைத்திருப்பது அவசியம்.
நாமினேஷனை அப்டேட் செய்வது ஏன் முக்கியமானதாக கருதப்படுகிறது?
சேமிப்புக் கணக்குகளில் நாமினியை நியமிப்பதன் மூலமாக அக்கவுன்ட் ஹோல்டர் இறந்துவிட்டால் சேமிப்புகள் எளிய முறையில் நாமினியின் பெயருக்கு மாற்றம் செய்து தரப்படும். நாமினி இல்லாவிட்டால் சட்டபூர்வமான வாரிசுகள் நீண்ட கிளைம் செயல்முறையில் ஈடுபட வேண்டிய நிலை ஏற்படலாம். இதற்கு வாரிசு சான்றிதழ்கள் போன்றவை தேவைப்படும்.
GST அல்லது பிற கட்டணங்கள் கிடையாது:
தபால் நிலையம் வசூலிக்கும் இந்த 50 ரூபாய் கட்டணம் தவிர நாமினியின் பெயரை சேர்ப்பதற்கோ அல்லது மாற்றுவதற்கோ எந்தவிதமான GST அல்லது கூடுதல் கட்டணங்கள் கிடையாது. இது நீங்கள் ஒருமுறை செலுத்தக்கூடிய மீண்டும் பெற இயலாத கட்டணம் ஆகும்.
தபால் நிலைய சேமிப்புக் கணக்கிற்கு புதிய நாமினியை சேர்க்கணுமா…? அல்லது மாற்றணுமா…? கட்டணம் ஏதேனும் உண்டா…?

