Last Updated:
இமாச்சலப் பிரதேசத்தில், சிறுத்தையிடம் கடுமையாக போராடி தங்களது உரிமையாளரை நாய்கள் பாதுகாத்துள்ளன.
இமாச்சல பிரதேசத்தில் பண்ணைக்குள் நுழைந்து உரிமையாளர்களைத் தாக்க முயன்ற சிறுத்தையை அங்கு காவலுக்கு இருந்த நாய்கள் தடுத்த காட்சிகள், இணையத்தில் வைரலாகி வருகிறது.
இமாச்சல பிரதேச மாநிலத்தின் சிர்மவுர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள நஹன் பகுதியில் உள்ள பண்ணையில், ஆடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. வழக்கம் போல, காலை நேரத்தில் பண்ணையின் கேட் திறக்கப்பட்டபோது உள்ளே சிறுத்தை புகுந்ததாகத் தெரிகிறது. அங்கிருந்த உரிமையாளர்களை சிறுத்தை தாக்க முயன்ற நிலையில், காவலுக்கு இருந்த நாய்கள், சிறுத்தையைத் தாக்கி கட்டுப்படுத்தின. நாய்களிடம் இருந்து தப்பிச் சென்ற சிறுத்தை, அங்கிருந்த குழாய் அருகே சென்று பதுங்கிக் கொண்டது. பின்னர் அங்கு வந்த வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையைப் பிடித்துச் சென்றனர்.

gaddi இனத்தைச் சேர்ந்த இந்த நாய்கள் பொதுவாக இமாச்சல், உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பண்ணைகளில் வளர்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Feb 25, 2026 10:51 AM IST


