பிப்ரவரி 20, 1947 அன்று, பிரிட்டன் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அப்போதைய பிரதமர் கிளமென்ட் அட்லி, பிரிட்டன் அரசு இந்தியாவை விட்டு வெளியேற உள்ளதாக அறிவித்தார். ஆனால், அதற்காக அவர் குறிப்பிட்ட தேதி ஜூன் 30, 1948. இதன்படி, சுதந்திரத்துக்காகவும் அதிகார மாற்றங்களுக்கும் தயாராக, ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒன்றரை ஆண்டு கால அவகாசம் இருந்தது.

