
Last Updated:
இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த தீபிகா நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார். விசாரணையில் பஸ் நடத்துனர், பேருந்தை பட்டியலில் சேர்த்த ஆப் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
தனியார் பேருந்தில் பயணம் செய்தபோது மூட்டை பூச்சிகள் கடித்ததாக கூறி,பயணி தொடர்ந்த வழக்கில் அவருக்கு ரூ. 1.11 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் 2022 ஆகஸ்ட் 16 ஆம் தேதியன்று தீபிகா என்பவர் ஸ்லீப்பர் வகுப்பில் தனியார் பேருந்தில் மங்களூருவிலிருந்து பெங்களூருவுக்கு சென்றுள்ளார் சென்றுள்ளார். பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ராஜா – ராணி என்ற தொடரில் கலந்து கொள்வதற்காக தீபிகாவும் அவரது கணவர் சோபராஜ் என்பவரும் தனியார் மொபைல் ஆப்-ல் டிக்கெட் புக் செய்து பயணம் மேற்கொண்டனர்.
அப்போது இருக்கையில் இருந்த மூட்டை பூச்சிகள் தீபிகாவை கடித்துள்ளன. இதனால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்காக மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டதால், ராஜா ராணி நிகழ்ச்சியில் அவரால் பங்கேற்க முடியவில்லை.
இதன் காரணமாக மன உளைச்சலில் இருந்த தீபிகா நுகர்வோர் நீதிமன்றத்தை நாடினார். விசாரணையில் பஸ் நடத்துனர், பேருந்தை பட்டியலில் சேர்த்த ஆப் ஆகியோர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
அபராதமாக ரூ. 18,650, டிக்கெட் கட்டணம் ரூ. 850, வழக்கு தொடர்ந்ததற்கான செலவு உள்பட மொத்தம் ரூ. 1.29 லட்சத்தை வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
January 01, 2025 9:11 PM IST
தனியார் பேருந்தில் மூட்டை பூச்சி தொல்லை… பயணி தொடர்ந்த வழக்கில் ரூ. 1.29 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவு

