• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தனியார் டி20 லீகுகள் காவு வாங்கிய இன்னொரு வீரர் ஹென்ரிச் கிளாசன்! | Heinrich Klaasen another player who prefers franchise T20 cricket leagues

GenevaTimes by GenevaTimes
June 3, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
தனியார் டி20 லீகுகள் காவு வாங்கிய இன்னொரு வீரர் ஹென்ரிச் கிளாசன்! | Heinrich Klaasen another player who prefers franchise T20 cricket leagues
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிறிஸ் கெயில், ட்ரெண்ட் போல்ட், மலிங்கா, சுனில் நரைன், குவிண்டன் டி காக், எய்டன் மார்க்ரம், நார்க்கியா, தப்ரைஸ் ஷம்சி இன்ன பிற வீரர்கள் தேசிய கிரிக்கெட்டைத் துறந்து தனியார் டி20 லீகுகளில் கவனம் செலுத்தி வருவதால் அந்தந்த நாட்டுக்கு ஏற்படும் பேரிழப்புகளைப் பார்த்து வருகிறோம். இப்போது உலகமே அஞ்சும் அதிரடி மன்னன் ஹென்ரிச் கிளாசன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி கடைசியாக நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முற்றிலும் புதிய வீரர்களைக் கொண்ட அணியை அனுப்ப நேரிட்டதற்குக் காரணம் முன்னணி வீரர்கள் தென் ஆப்பிரிக்கா டி20 லீகுகள் ஒப்பந்த நெருக்கடிகளைத் தாண்டி நாட்டுக்கு ஆட முடியாமல் போனதுதான். இதே தென் ஆப்பிரிக்கா டி20 லீக் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா தியாகம் செய்ய நேரிட்டதால் 2023 உலகக் கோப்பைத் தகுதியே தென் ஆப்பிரிக்காவுக்குச் சிக்கலானதையும் பார்த்தோம்.

ஹென்ரிச் கிளாசன் கடைசியாக சாம்பியன்ஸ் டிராபியில் நியூஸிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஆடினார். தன் 7 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் அனுபவத்தில் 4 டெஸ்ட் போட்டிகள், 60 ஒருநாள் போட்டிகள், 58 டி20 சர்வதேசப் போட்டிகளில் ஆடியுள்ளார் கிளாசன். ஒருநாள் கிரிக்கெட்டில் 117.05 என்ற அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட்டில் இருக்கும் போது அவர் ஓய்வு அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவைப் புரட்டி எடுத்த கிளாசனின் அராஜக அதிரடி இன்னிங்ஸ்: 50 ஓவர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சென்சூரியனில் 2023-ம் ஆண்டு கிளாசன் அடித்த காட்டடி சதத்தை யாராலும் மறக்க முடியாது. ஒருநாள் கிரிக்கெட்டில் ஆல்டைம் கிரேட் இன்னிங்ஸ்களில் அது ஒன்று எனலாம். ஜாஷ் ஹேசில்வுட், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மைக்கேல் நீசர், நேதன் எல்லிஸ், ஆடம் சாம்பா அடங்கிய பவுலிங் வரிசையை அன்று அவர் புரட்டி எடுத்தார்.

83 பந்துகளில் 13 பவுண்டரிகள் 13 சிக்சர்களுடன் 174 ரன்களை அடித்து நொறுக்கினார் ஹென்ரிச் கிளாசன். இன்றும் ஆஸ்திரேலியர்கள் பார்த்தால் நடுநடுங்கும் ஒரு ஒருநாள் சர்வதேச இன்னிங்ஸ் என்றால் அது இதுதான். இவரும் டேவிட் மில்லரும் இணைந்து 15 ஓவர்களில் 222 ரன்களை 5-வது விக்கெட்டுக்காகப் புரட்டி எடுக்க தென் ஆப்பிரிக்கா 416 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலியா 35-வது ஓவரில் 252 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி படுதோல்வி கண்டது. ஆடம் சாம்பா 10 ஓவர்களில் 113 ரன்கள் விளாசப்பட்டார். இதில் 8 பவுண்டரிகள் 9 சிக்சர்களை வழங்கினார் சாம்பா.

அப்படியே அதே ஃபார்மைத் தொடர்ந்து 2023 ஐசிசி உலகக் கோப்பையில் இந்தியாவில் கலக்குக் கலக்கென்று கலக்கினார் கிளாசன். தென் ஆப்பிரிக்கா அரையிறுதியில் நுழைய கிளாசன் பங்களிப்பு அதிகம். அப்படியே 2024 டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் 27 பந்துகளில் 52 ரன்களை விளாசி இந்திய அணியின் வயிற்றில் புளியைக் கரைத்தார்.

கிளாசன் ஓய்வு பெறுவதற்கு டி20 லீகுகள் பிரதான காரணமாக இருந்தாலும், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் பங்களிப்பும் உள்ளது. தென் ஆப்பிரிக்க கிரிக்கேட் வாரியத்தின் வீரர்கள் ஒப்பந்தத்தில் இவரை புறமொதுக்கியே வந்துள்ளனர். மேலும், தென் ஆப்பிரிக்க வெள்ளைப்பந்து அணி கோச் ஷுக்ரி கான்ராட், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள்தான் அணிக்குத் தேவை, ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு காலுமாக டி20 லீகுகள், தென் ஆப்பிரிக்க தேசிய கிரிக்கெட் என்று இரட்டை நிலை உள்ள வீரர்கள் தேவையில்லை என்று திட்டவட்டமாக நிலைப்பாடு எடுத்ததும் ஹென்ரிச் கிளாசனின் ஓய்வுக்கு ஒரு காரணமாகும்.

கிளாசனும் ஓய்வு அறிவித்து விட்டு, “இது எனக்கு துன்பகரமான நாள்” என்று வேதனையுடன் தான் விடைபெற்றிருக்கிறார். இதற்கு ஒரு வழியை மற்ற கிரிக்கெட் வாரியங்கள் கண்டுபிடிக்க வேண்டும். தேசிய கிரிக்கெட்டுக்கும் ஒரு முக்கிய வீரர் அழைக்கப் பெறுவதற்கான சாத்தியங்கள், அவரை தனியார் லீகுகள் விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆகியவற்றை ஐசிசியும் தனியார் லீகுகளை நடத்தும் கிரிக்கெட் வாரியங்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும், இல்லையெனில் கிளாசன் போன்ற திறமைகள் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்தும் காணாமல் போவதுதான் நடக்கும்.



Read More

Previous Post

”எனது பேச்சு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது வேதனை அளிக்கிறது” – கமல்ஹாசன் கடிதம் | It hurts that what I said was misunderstood Kamal Haasan letter

Next Post

அரசாங்கம் தேக்கமடைந்துள்ள பட்டதாரி சம்பளத்தை சரி செய்ய வேண்டும் – Malaysiakini

Next Post
அரசாங்கம் தேக்கமடைந்துள்ள பட்டதாரி சம்பளத்தை சரி செய்ய வேண்டும் – Malaysiakini

அரசாங்கம் தேக்கமடைந்துள்ள பட்டதாரி சம்பளத்தை சரி செய்ய வேண்டும் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin