• Login
Wednesday, October 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தனியார்மயமாகும் சென்னை விமான நிலையம்? முதலமைச்சர் விஜய்-இன் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை? | Chennai Airport Privatisation: Centre Weighs PPP Model After CM Vijay Seeks Private Operator

GenevaTimes by GenevaTimes
October 21, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தனியார்மயமாகும் சென்னை விமான நிலையம்? முதலமைச்சர் விஜய்-இன் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை? | Chennai Airport Privatisation: Centre Weighs PPP Model After CM Vijay Seeks Private Operator
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தனியார்மயமாகும் சென்னை விமான நிலையம்? முதலமைச்சர் விஜய்-இன் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை?

சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இது தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தனியார்மயமாக்கும் நடவடிக்கைக்கு திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவில் உள்ள முக்கிய பெருநகர விமான நிலையங்களின் வரிசையில் சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களின் நிர்வாகத்தையும் மேம்பாட்டு பணிகளையும் தனியார்மயமாக்க அதாவது Public-Private Partnership – PPP மாடலுக்கு மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என பைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி குறிப்பிடுகிறது. நாட்டின் இதர முக்கிய விமான நிலையங்களின் தரத்திற்கு இணையாக இந்த விமான நிலையங்களின் வசதிகளை உயர்த்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாம்.

தனியார்மயமாகும் சென்னை விமான நிலையம்? முதலமைச்சர் விஜய்-இன் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை?

இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்களான டெல்லி , ஐதராபாத் ஆகியவை GMR குழுமம் கட்டுப்பாட்டில் உள்ளது, மும்பை அதானி குழுமம் மற்றும் பெங்களூரு ஃபேர்ஃபேக்ஸ் என தனியார் நிறுவனங்களால் இயக்கப்பட்டு வருகின்றன ஆனால், சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்கள் மட்டுமே இதுவரை இந்திய விமான நிலைய ஆணையத்தால் நேரடியாக கையாளப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.

முன்னதாக தமிழ்நாட்டில் தொழில்துறை வளர்ச்சிக்கு உகந்த சூழலை உருவாக்கவும், முதலீடுகளை ஈர்க்கவும் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் போக்குவரத்து, விமான இயக்கம் மற்றும் சரக்கு கையாளுதல் ஆகியவை மேம்படுத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் விஜய் கடந்த ஆகஸ்ட் மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

சென்னை விமான நிலையத்தின் சேவை தரத்தையும் வசதிகளையும் மேம்படுத்த ஒரு தனியார் ஆபரேட்டர் தேவை கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் தான் சென்னை மற்றும் கொல்கத்தா விமான நிலையங்களை PPP முறையில் இயக்கலாமா என்ற யோசனை தீவிரமடைந்துள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், ‘இயக்கம், பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தம்’ (OMDA – Operation, Maintenance and Development Agreement) என்ற மாடலை பின்பற்றியே முக்கிய விமான நிலையங்களை மேம்படுத்தி வருகிறது. இதன் கீழ், விமான நிலையத்தை மேம்படுத்துதல், இயக்குதல் மற்றும் நிர்வகித்தல் போன்ற பணிகள் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும். அதேசமயம், வான்வழி போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் தகவல் தொடர்பு, கண்காணிப்பு சேவைகள் ஆகியவை தொடர்ந்து இந்திய விமான நிலைய ஆணையத்தின் வசமே தக்கவைக்கப்படும்.

2025-26ஆம் நிதியாண்டில் சென்னை விமான நிலையம் 23.01 மில்லியன் பயணிகளை கையாண்டுள்ளது. இது முந்தைய ஆண்டை காட்டிலும் 2.7% வளர்ச்சியாகும். மேலும், இது கோவிட் பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையான 22.54 மில்லியன் பயணிகளை விட அதிகமாகும். தற்போதுள்ள முனையங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் 30 மில்லியன் பயணிகளை கையாள முடியும். புதிய முனையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது இதன் திறன் 35 மில்லியன் பயணிகளாக உயரும்.

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தாலும் அதற்கேற்ற வசதிகள் இல்லை, மேலாண்மை சரியில்லை என தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இதனால் தனியார்மயமாக்க வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருக்கிறது.

Share This Article

English summary

Chennai Airport Privatisation: Centre Weighs PPP Model After CM Vijay Seeks Private Operator

தனியார்மயமாகும் சென்னை விமான நிலையம்? முதலமைச்சர் விஜய்-இன் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை? / The Centre is reportedly considering offering Chennai and Kolkata airports under a public-private partnership (PPP) model in its next phase of airport development, aiming to upgrade facilities to the level of other major metro airports.

Story first published: Wednesday, October 21, 2026, 9:35 [IST]

Other articles published on Oct 21, 2026

Read More

Previous Post

‘அந்தரங்க வீடியோக்கள்.. விடிய விடிய காதல் பேச்சு..’ இன்ஸ்டாகிராமில் வந்த இளம்பெண்.. விசாரணையில் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

புக்கிட் அமான், சிங்கப்பூர் காவல்துறை இணைந்து நடத்திய எல்லை தாண்டிய குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில் 30 சந்தேக நபர்கள் கைது | Makkal Osai

Next Post
புக்கிட் அமான், சிங்கப்பூர் காவல்துறை இணைந்து நடத்திய எல்லை தாண்டிய குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில் 30 சந்தேக நபர்கள் கைது | Makkal Osai

புக்கிட் அமான், சிங்கப்பூர் காவல்துறை இணைந்து நடத்திய எல்லை தாண்டிய குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கையில் 30 சந்தேக நபர்கள் கைது | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin