ஐடிபிஐ வங்கியின் பங்குகளை விற்க கடந்த 2021 மே மாதத்தில் மத்திய அரசு முடிவு எடுத்தது. அதன்படி, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கு ரிசர்வ் வங்கியும் அனுமதி கொடுத்துவிட்டது. இதையடுத்து நடைபெற்ற ஏலத்தில் ஐடிபிஐ வங்கியின் பங்குகள் விற்கப்பட்டன. ஆனால், ஏலம் எடுத்தவர்களின் பின்னணி குறித்த அறிக்கையை ரிசர்வ் வங்கி ஆய்வு செய்து வருகிறது.
அறிக்கையை ஆய்வு செய்து ரிசர்வ் வங்கி அனுமதி கொடுத்துவிட்டால், வரும் ஜூலை 23ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ள மத்திய பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏலதாரர்களுக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் வழங்கும் என்ற செய்தி வெளியானவுடன் ஐடிபிஐ வங்கியின் பங்குகளின் மதிப்பு உயர்ந்து வருகிறது.
ரிசர்வ் வங்கி ஒரேயொரு வெளிநாட்டு ஏலதாரரைத் தவிர மற்ற அனைத்து ஏலதாரர்களின் பின்னணி குறித்தும் அறிக்கை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில், வெளிநாட்டு ஏலதாரர் அவர் குறித்த தகவல்களை பகிரவில்லை என்று கூறப்படுகிறது. ஐடிபிஐ வங்கியில் மத்திய அரசு 45.5 சதவீத பங்குகளையும், எல்.ஐ.சி, 49 சதவீத பங்குகளையும் வைத்துள்ளன. முதலில் நிதி நிறுவனமாக இருந்து பின்னர் வங்கியாக மாறிய ஐடிபிஐ வங்கியின் தற்போதைய சந்தை மதிப்பு 99.78 ஆயிரம் கோடியாக உள்ளது.
இதையும் படிங்க:
அமைக்கப்படுகிறதா 8வது ஊதியக்குழு? – மாதச் சம்பளதாரர்களுக்கு பட்ஜெட்டில் வெளியாகப் போகும் குட்நியூஸ்
அரசு கட்டுப்பாட்டின்படி, ஐடிபிஐ வங்கியின் 60.7 சதவீத பங்குகளை மட்டுமே விற்க முடியும். எனவே, மத்திய அரசு 30.5 சதவீத பங்குகளை விற்கலாம். தற்போதைய சந்தை மதிப்பின்படி, மத்திய அரசு விற்பனை செய்தால், அரசுக்கு ரூ.29,000 கோடிக்கு மேல் கிடைக்கும். இந்த பணத்தை பிபிசிஎல், கான்கார், பிஇஎம்எல், ஷிப்பிங் கார்ப்பரேஷன் போன்றவற்றில் முதலீடு செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால், கடந்த 18 மாதங்களாக இதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், பிபிசிஎல் நிறுவனத்தின் முதலீட்டை மத்திய அரசு ஒத்திவைத்துள்ளதாகவும், பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் இலக்குகளை அடைய முடியாத துறைகளில் இருந்து வெளியேறுவது குறித்து அரசு பலமுறை ஆலோசித்து வருகிறது. ஆனால், தற்போது வரை ஏர் இந்தியா நிறுவனத்தை மட்டுமே கைமாற்றியுள்ளது. எனவே, ஐடிபிஐ வங்கியை தனியார் மயமாக்குவதில் எந்த சிக்கலும் இருக்கக் கூடாது என்று சந்தை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
