வட்டி விகிதம் மற்றும் மொத்த செலவு
வருடாந்திர வட்டி விகிதங்கள்: தனிநபர் கடன் விகிதங்கள் ஒவ்வொரு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் இடையே பரவலாக வேறுபடுகின்றன. மேலும், உங்கள் கிரெடிட் ஸ்கோர், கடனை திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் கடந்த காலத்தில் வாங்கிய கடனை திருப்பி செலுத்திய வரலாறு போன்ற காரணிகளைப் பொறுத்தும் மாறுபடும்.
அனைத்தையும் உள்ளடக்கிய செலவு: கடன் வாங்குபவர்கள் வட்டி விகிதத்திற்கு அப்பால், செயலாக்கக் கட்டணங்கள், முன்கூட்டியே செலுத்தும் அபராதங்கள் மற்றும் முன்கூட்டியே கடன் வாங்கும் செலவுகள் போன்ற கூடுதல் கட்டணங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும். ஏனெனில், இவை கடன் வாங்குவதற்கான செலவை கணிசமாக மாற்றும்.
கட்டணங்கள் மற்றும் மறைக்கப்பட்ட கட்டணங்கள்
செயலாக்கக் கட்டணம்: பெரும்பாலான கடன் வழங்குநர்கள் கடன் தொகையில் 0.5% முதல் 5% வரை செயலாக்கக் கட்டணத்தையும், ஜிஎஸ்டியையும் வசூலிக்கின்றனர்.
கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்த விரும்பினால் சில கடன் வழங்கும் நிறுவனங்கள் 2–5% வசூலிக்கிறார்கள்.
இஎம்ஐ செலுத்தாமல் தவறவிட்டால், அபராதக் கட்டணங்கள், சாத்தியமான சட்ட விரிவாக்கம் மற்றும் கிரெடிட் ஸ்கோரில் எதிர்மறையான தாக்கத்திற்கு வழிவகுக்கும்.
கடன் வாங்குபவரின் சுய விவரம் மற்றும் தகுதி
கிரெடிட் ஸ்கோர்: வலுவான கடன் வரலாறு மற்றும் 750-க்கும் மேல் கிரெடிட் ஸ்கோர் இருந்தால், கடன் ஒப்புதல் விரைவாக கிடைப்பதோடு சிறந்த வட்டி விகிதங்களைப் பெற உதவுகிறது.
வருமான நிலைத்தன்மை மற்றும் DTI விகிதம்: கடன் வழங்குபவர்கள் உங்கள் கடன்-வருமான (DTI) விகிதத்தை மதிப்பிடுகிறார்கள். இது பெரும்பாலும் 35% அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும் என பொதுவாக விரும்பப்படுகிறது.
சம்பளம் வாங்கும் நபர்கள் அல்லது நிலையான வேலைவாய்ப்பு பதிவுகளைக் கொண்டவர்கள் பல சாதகமான விதிமுறைகளைப் பெறுவார்கள்.
கடன் தொகை மற்றும் காலம்
சரியான தவணைக் காலத்தைத் தேர்ந்தெடுப்பது: நீண்ட தவணைக் காலங்கள் மாதாந்திர இஎம்ஐ தொகையை குறைத்து, மொத்த வட்டியை அதிகரிக்கின்றன. அதே நேரத்தில் குறுகிய தவணைக் காலங்கள் இஎம்ஐ சுமையை அதிகரித்து, கடனின் ஒட்டுமொத்த செலவைக் குறைக்கின்றன.
பெரிய கடன் தொகைகள் கடன் வழங்குபவரின் இடர் மதிப்பீட்டைப் பொறுத்து சற்று மாறுபட்ட வட்டி விகிதங்களை பெறக்கூடும்.
முன்பணம் செலுத்துதல், நெகிழ்வுத்தன்மை மற்றும் கடன் வழங்குநர் உறவு
நீங்கள் கடன் வாங்கும் வங்கி, பகுதியாக அல்லது முழு தொகையை முன்கூட்டியே செலுத்துதலை அனுமதிக்கிறார்களா என்பதை உறுதிசெய்து, முன்கூட்டியே செலுத்தும் செலவைப் புரிந்துகொள்ள தொடர்புடைய கட்டணங்களைச் சரிபார்க்கவும்.
ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்கள், குறிப்பாக சம்பளம் அல்லது சேமிப்புக் கணக்குகளைக் கொண்டவர்கள் சிறந்த விதிமுறைகள் குறித்து வங்கியிடம் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.
அதிக அபராதங்கள் இல்லாமல் கடனை முன்கூட்டியே முடிக்க முடியுமா என்பதைப் புரிந்துகொள்ள முன்கூட்டியே கடன் முடிப்பதற்கான நிபந்தனைகளை மதிப்பாய்வு செய்யவும்.
அதிக வட்டி விகிதங்கள், மறைக்கப்பட்ட கட்டணங்கள், அதிகமாக கடன் வாங்குவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் திருப்பிச் செலுத்தத் தவறினால் கிரெடிட் ஸ்கோரில் எதிர்மறையான தாக்கங்கள் போன்ற அபாயங்களை தனிநபர் கடன்கள் கொண்டுள்ளன. கடன் வாங்குபவர்கள் கடன் வாங்குவதற்கு முன்பு இந்த அபாயங்களை கவனமாக மதிப்பிட்டு நிதி ஆலோசகரின் வழிகாட்டுதலைப் பெற வேண்டும்.
November 20, 2025 12:44 PM IST
தனிநபர் கடன் வாங்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்களா…? சரிபார்க்க வேண்டிய 5 முக்கிய காரணிகள்…!

