• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தனிநபர் கடனா அல்லது கிரெடிட் கார்டா.. ? குறைந்த செலவை தருவது எது? | வணிகம்

GenevaTimes by GenevaTimes
November 3, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
தனிநபர் கடனா அல்லது கிரெடிட் கார்டா.. ? குறைந்த செலவை தருவது எது? | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 03, 2025 4:59 PM IST

சிறிய அளவிலான, திட்டமிடப்பட்ட செலவினத்திற்கு கார்டு இஎம்ஐ ஏற்றதாக இருக்கும். அதை நீங்கள் ஒரு சில மாதங்களுக்குள் செலுத்த முடியும் என்றால், குறிப்பாக அட்டை வழங்கும் நிறுவனம் உண்மையாகவே குறைந்த விலையை வழங்கினால் இது பயனுள்ளது.

News18
News18

பொதுவாக கிரெடிட் கார்டு இஎம்ஐ விட தனிநபர் கடனில் வருடாந்திர வட்டி குறைவாக இருக்கும். தனிநபர் கடனில், நிலையான வட்டி விகிதம், தெளிவான தவணைக்காலம் மற்றும் மாறாத இஎம்ஐ ஆகியவற்றைப் பெறுவீர்கள். ஆகவே இதில் மொத்த வட்டியைக் கட்டுப்படுத்துவது எளிது.

அதேசமயம் கிரெடிட் கார்டு இஎம்ஐ செக் வசதியாகத் தோன்றினாலும், அதன் செயலாக்கக் கட்டணங்கள், கடன் வரம்பு மற்றும் கடனுக்கான காலக்கெடுவைத் தவறும்பட்சத்தில் அதிக கட்டண அபாயம் என செலவுகள் அதிகரிக்கும். அதிக தொகை தேவைப்பட்டாலோ திருப்பிச் செலுத்தும் காலம் நீண்டதாக (இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள்) வேண்டும் என்றாலோ தனிநபர் கடன் வாங்குவது மலிவானது. ஏனெனில் வட்டி விகிதம் குறைவாகவும் திட்டம் நிலையானதாகவும் இருக்கும்.

சிறிய பொருளை வாங்க முடிவு செய்து, அதை விரைவாகவும் திருப்பிச் செலுத்த முடிந்தால், அதுவும் சலுகை இருந்தால், சரியான நேரத்தில் பணம் செலுத்துவீர்கள் என்பதில் உறுதியாக இருந்தால், ப்ரோமோஷனல் கார்டு இஎம்ஐ சிறந்த ஒன்றாக இருக்கும். ஆனால் கிரெடிட் கார்டு கடனை திருப்பிச் செலுத்த நீங்கள் அதிக காலம் எடுத்துக் கொண்டால், அது செலவு மிக்கதாக மாறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பதற்கு முன் எதெல்லாம் சரிபார்க்க வேண்டும்: மொத்த செலவை ஒப்பிடுங்கள். செயலாக்க கட்டணங்கள், ஜிஎஸ்டி, காப்பீட்டு ஆட்-ஆன் தொகை மற்றும் முன்கூட்டியே அடைத்தல் அல்லது முன்கூட்டியே செலுத்துவதால் வரும் அபராதம் ஆகியவற்றைச் சேர்க்கவும். மேலும் குறுகிய காலம் என்றால் அதிக இஎம்ஐ செலுத்த வேண்டும். ஆனால் ஒட்டுமொத்தமாக குறைந்த வட்டியே வரும்.

நீங்கள் கிரெடிட் கார்டு இஎம்ஐ-யைத் தேர்வுசெய்தால், அது உங்கள் கடன் வரம்பின் ஒரு பகுதியைக் கட்டுப்படுத்தும். உங்கள் பயன்பாட்டு விகிதத்தை அதிகரிக்கும். மேலும் நீங்கள் ஒரு முறை பணம் செலுத்தத் தவறினால் கூட உங்கள் கிரெடிட் ஸ்கோரைப் பாதிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கிரெடிட் கார்டு இஎம்ஐ எப்போது பயனுள்ளதாக இருக்கும்?: சிறிய அளவிலான, திட்டமிடப்பட்ட செலவினத்திற்கு கார்டு இஎம்ஐ ஏற்றதாக இருக்கும். அதை நீங்கள் ஒரு சில மாதங்களுக்குள் செலுத்த முடியும் என்றால், குறிப்பாக அட்டை வழங்கும் நிறுவனம் உண்மையாகவே குறைந்த விலையை வழங்கினால் இது பயனுள்ளது.

எப்போது தனிநபர் கடன் சிறந்த தேர்வாக இருக்கும்?: பெரிய தொகை, நீண்ட கால அவகாசம் அல்லது கணிக்கக்கூடிய இஎம்ஐ மற்றும் உங்கள் அன்றாட கார்டு செலவினங்களை தனியாக பிரிக்க முடிவு செய்தாலோ, தனிநபர் கடனைத் தேர்வுசெய்யுங்கள். தனிநபர் கடன் எடுப்பதால், உங்கள் கிரெடிட் கார்டை அவசரகாலங்களுக்கு பயன்படுத்த முடியும்.

அதிக தொகை தேவைப்பட்டாலோ அல்லது கடனை திருப்பிச் செலுத்த பல ஆண்டுகள் ஆகும் என்றாலோ, தனிநபர் கடன் வாங்குவது குறைவான செலவை தரக்கூடியதாக இருக்கும். சிறிய தொகை தேவைப்பட்டாலோ, அதுவும் குறைந்த விலை சலுகையின் கீழ் விரைவாக திருப்பிச் செலுத்த முடிந்தால், கிரெடிட் கார்டு இஎம்ஐ பயனுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

November 03, 2025 4:59 PM IST

Read More

Previous Post

மகளிர் உலகக் கோப்பை வெற்றி… 36 வயதில் ஹர்மன்ப்ரீத் கவுர் செய்த சாதனை! | விளையாட்டு

Next Post

250 SME நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்கல் நடைமுறை விழிப்புணர்வைப் பெற்றன | Makkal Osai

Next Post
250 SME நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்கல் நடைமுறை விழிப்புணர்வைப் பெற்றன | Makkal Osai

250 SME நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்கல் நடைமுறை விழிப்புணர்வைப் பெற்றன | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin