சிங்கப்பூர் ஜூன் 5 ஆம் தேதி(நேற்று) புக்கிட் பாஞ்சாங்கில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் 74 வயதுடைய மனைவியை 88 வயதுடைய முதியவர் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு அதிகாலை 1 மணியளவில் தகவல் வந்ததாக தெரிவித்தது.
சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு நள்ளிரவு 12.45 மணியளவில் தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.
சம்பவ இடத்திலேயே 74 வயதுடைய பெண் இறந்து விட்டதாக மருத்துவ உதவியாளர் கூறினார்.
மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

