• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

தனது இரண்டு குழந்தைகள் உடன் 31 நாட்களில் 800 கி.மீ நடைப்பயணம் – தந்தை சொல்லும் நெகிழ்ச்சி காரணம் | உலகம்

GenevaTimes by GenevaTimes
August 31, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
தனது இரண்டு குழந்தைகள் உடன் 31 நாட்களில் 800 கி.மீ நடைப்பயணம் – தந்தை சொல்லும் நெகிழ்ச்சி காரணம் | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 31, 2025 5:03 PM IST

திரு. வூ தனது 10 வயது மகள், 8 வயது மகனுடன் 800 கி.மீ நடைப்பயணம் செய்து, விடாமுயற்சி பொறுப்பு கற்றுக்கொடுத்தார். சாங்ஷாவில் முடிந்த பயணம் சமூக ஊடகங்களில் பாராட்டு பெற்றது.

குழந்தைகளுக்கு விடாமுயற்சி, பொறுப்பு, தொடங்கியதை முடிக்கும் பழக்கம் ஆகியவற்றை கற்றுக்கொடுப்பதற்காக சீனாவைச் சேர்ந்த தந்தை ஒருவர் தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு 800 கி.மீ நடைப்பயணம் மேற்கொண்டது பலரையும் வியக்க வைத்துள்ளது.

சீனாவின் தெற்கு பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது இரண்டு குழந்தைகளுடன் 31 நாட்களில் 800 கிலோமீட்டர் நடைப்பயணத்தை வெற்றிகரமாக முடித்துள்ளார். தனது 10 வயது மகள் மற்றும் 8 வயது மகனுடன் பயணித்த இந்த தந்தையின் முயற்சிக்கு சமூக ஊடகங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ள படி, திரு. வூ என அழைக்கப்படும் இந்த தந்தை, ஜூலை 17 அன்று ஷென்செனில் உள்ள பாவோன் மாவட்டத்திலிருந்து தனது குழந்தைகளுடன் இந்த வித்தியாசமான பயணத்தைத் தொடங்கினார். சுமார் ஒரு மாத காலம் நீடித்த இந்த பயணம் ஆகஸ்ட் 17 அன்று ஹுனான் மாகாணத் தலைநகரான சாங்ஷாவில் நிறைவடைந்தது.

தனது ஓட்டுநர் பயிற்சி பள்ளி தொழிலால் காரணமாக அவர் பிஸியாக இருந்ததால், குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட முடியாததாக திரு. வூ தெரிவித்தார். ஏற்கெனவே, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இப்படிப்பட்ட ஒரு பயணத்தை திட்டமிட்டிருந்தாலும், அப்போது குழந்தைகள் மிகவும் சிறியதாக இருந்ததால் அந்த திட்டத்தை ஒத்திவைத்தார். இப்போது இந்த நடைப்பயணம் மூலம், குழந்தைகளுக்கு விடாமுயற்சி, பொறுப்பு, தொடங்கியதை முடிக்கும் பழக்கம் ஆகியவற்றை கற்றுக்கொடுக்க விரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.

பயணத்தின் போது, திரு. வூ சுமார் 10 கிலோ எடையுள்ள பையைச் சுமந்து சென்றுள்ளார். அதேபோல், அவரது இரண்டு குழந்தைகளும் தலா 5 கிலோ எடையுடன் பயணம் செய்தனர். அவர்கள் தினசரி குறைந்தது 23 கிலோமீட்டர் வரை நடந்து சென்றனர். சோர்வு ஏற்பட்ட போதும், தந்தையின் ஊக்கமளிக்கும் வார்த்தைகள் குழந்தைகளை தொடர்ந்து பயணம் செய்ய வைத்தன. குழந்தைகளுக்கு எந்த காயங்களும் ஏற்படவில்லை, ஆனால், திரு. வூ-வுக்கு காலில் கொப்புளங்கள் ஏற்பட்டன.

மேலும், நிதி பொறுப்பை கற்பிக்க தினசரி செலவுக்கான வரம்பையும் அவர் நிர்ணயித்திருக்கிறார். குழந்தைகள் அதை மீறினால், கூடுதலான செலவை தங்களது பாக்கெட் மணியில் இருந்து செலுத்த வேண்டியிருந்தது. ஆகஸ்ட் 17 அதிகாலை 1:30 மணிக்கு, அவர்கள் இறுதியாக சாங்ஷாவை அடைந்தனர். அப்போது அங்கு காத்திருந்த திரு. வூவின் மனைவி, ஆரம்பத்தில் அவர்களது பயணத்தைப் பற்றி கவலைப்பட்டாலும், பின்னர் குழந்தைகளில் ஏற்பட்ட நேர்மறை மாற்றங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தார்.

இந்த நடைப்பயணம் அவரது மகளைக் குறைவான விருப்பமுள்ளவராகவும், மகனை சுயநிறைவுடன் நடக்கக் கூடியவராகவும் மாற்றியதாக அவர் கூறினார். சமூக ஊடகங்களில் பலரும், திரு. வூவின் அர்ப்பணிப்பையும், பயணத்தின் மூலம் அவர்களுக்கு வழிகாட்டுதலின் மதிப்பையும் பாராட்டியுள்ளனர்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
Location :

Chennai,Tamil Nadu

First Published :

August 31, 2025 5:03 PM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

தனது இரண்டு குழந்தைகள் உடன் 31 நாட்களில் 800 கி.மீ நடைப்பயணம் – தந்தை சொல்லும் நெகிழ்ச்சி காரணம்

Read More

Previous Post

ஒரு மாதத்தில் 3 முறைக்கு மேல் ATM யூஸ் பண்ணா எவ்வளவு கட்டணம் செலுத்தணும் தெரியுமா? | வணிகம்

Next Post

படகு கவிழ்ந்து கணவன் – மனைவி பலி

Next Post
படகு கவிழ்ந்து கணவன் – மனைவி பலி

படகு கவிழ்ந்து கணவன் – மனைவி பலி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin