குழந்தையை புதைத்த கொடூரம்
திருமணமாகாத நிலையில் குழந்தை பிறந்ததால், சமூக அவமானம் ஏற்படும் என்று அஞ்சிய வினோதா, பிறந்த உடனேயே குழந்தையை வீட்டு வாசலில் குழிதோண்டி உயிரோடு புதைத்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற பெண் ஒருவர், குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு சந்தேகமடைந்து அருகில் சென்று பார்த்தபோது, குழந்தையின் கை வெளியே தெரிந்தது. உடனடியாக அவர் குழந்தையை மீட்டு, பணையப்பட்டி அரசு சுகாதார நிலையத்தில் சேர்த்து உள்ளார். முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை ராணியார் அரசு மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்டது. தற்போது குழந்தை நலமுடன் இருப்பதாகவும், தொடர் கண்காணிப்பில் உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

