Last Updated:
தன்னுடைய உடல்நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
தன்னுடைய உடல்நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
86 வயதான போப் பிரான்சிஸ், ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் பிப்ரவரி 14 அன்று சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவருக்கு சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டது. 17 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போப் பிரான்சிஸை இரண்டு வாடிகன் அதிகாரிகள் சந்தித்தனர். தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்குமாறு அவர்களிடம் போப் பிரான்சிஸ் கூறியுள்ளார்.
போப் பிரான்சிஸின் உடல்நிலை குறித்து வாடிகன் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புருனி கூறுகையில், “போப் பிரான்சிஸுக்கு ரத்த ஓட்டம் சீராக உள்ளது. வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையில் எந்த அதிகரிப்பும் இல்லை. போப் பிரான்சிஸ் இரவு நேரத்தை அமைதியாக கழித்தார். அவருக்கு சுவாச பிரச்சனைகள் எதுவும் ஏற்படவில்லை” என்றார்.
ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு பிரார்த்தனை செய்வது போப் பிரான்சிஸின் வழக்கம். ஆனால் உடல்நிலை சரியில்லாததால் கடந்த 3 வாரங்களாக அவரால் பிரார்த்தனையில் கலந்து கொள்ள முடியவில்லை. இந்நிலையில் போப் பிரான்சிஸை சந்தித்த வாடிகன் அதிகாரிகளிடம், “நான் உங்கள் அனைவரின் அன்பையும், நெருக்கத்தையும் உணர்கிறேன். கடவுளின் அனைத்து மக்களாலும் ஆதரிக்கப்படுவது போல் உணர்கிறேன்” என்று கூறியதாக மேட்டியோ புருனி தெரிவித்தார்.
March 03, 2025 7:39 PM IST


