அமெரிக்க வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதிச் சடங்கு தெஹ்ரானில் நடைபெற்று வருகிறது.
இன்று, லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த தெஹ்ரான் வீதிகளிலும், பெரிய மசூதி வளாகத்திலும் திரண்டனர்.
தங்கள் கோபத்தை “அமெரிக்காவுக்கு அழிவு”, “டிரம்ப்பை வீழ்த்துவோம்” மற்றும் “இஸ்ரேலுக்கு அழிவு” என்று பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.
சவப்பெட்டியைக் கண்டதும் மகன்கள் கண்ணீர் விட்ட மகன்கள்
இதனிடையே கமேனியின் மூன்று மகன்களான முஸ்தபா, மெசம் மற்றும் மசூத் ஆகியோரும், மூத்த அதிகாரிகளும், ராணுவப் பிரமுகர்களும் தெஹ்ரானில் நடந்த பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர்.

தங்கள் தந்தையின் சவப்பெட்டியைக் கண்டதும் மகன்கள் கண்ணீர் விட்ட காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
மற்றொரு மகனும் ஈரானின் தற்போதைய உச்ச தலைவருமான மொஜ்தபா காமேனி, பாதுகாப்பு காரணங்களுக்காக இறுதிச்சடங்கில் பங்கேற்கவில்லை.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

