• Login
Monday, March 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தந்தையரை கொண்டாடி மகிழ்வோம், டத்தோ ஸ்ரீ சரவணனின் தந்தையர் தின வாழ்த்து | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 16, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
தந்தையரை கொண்டாடி மகிழ்வோம், டத்தோ ஸ்ரீ சரவணனின் தந்தையர் தின வாழ்த்து | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்..

தனது கடமையில் சற்றும் விலகாமல் இருக்கும் தந்தையர்களை இந்த தந்தையர் தினத்தில் கொண்டாடி மகிழ்வோம் என்று மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் தமது தந்தையர் தின வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தினார்.

தான் கடந்து வந்த சிரமங்களையும், சிக்கல்களையும் மறைத்துத் தன் பிள்ளைகள் அந்த கஷ்டங்களை அனுபவிக்கக் கூடாது என எண்ணும் தந்தையர்கள் அனைவரும் தெய்வத்திற்கு ஈடானவர்கள் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினறுமான அவர் புகழ்ந்துரைத்தார்.

மாதா பிதா குரு தெய்வம்,தாயிற் சிறந்த கோவிலும் இல்லை,
தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’

இப்படித் தாயைப் புகழும் அதே கணத்தில், தந்தைக்கும் அந்த புகழில் பங்கு உண்டு என்பதை நாம் மறுக்கவோ, மறைக்கவோ இயலாது. ஒரு குடும்பத்தில் தந்தை சரியாக தனது கடமையைச் செய்தால்தான், தாயால் சரியான முறையில் தன் குழந்தைகளை வளர்க்க முடியும், குடும்பத்தைக் காக்க முடியும்.

கடந்த காலங்களைப் போல குடும்பத்தின் பொறுப்பு, குடும்பத்திற்குப் பொருளாதாரம் ஈட்டும் பொறுப்பு தந்தைக்கு மட்டுமே என்று இல்லாமல் இருந்தாலும், பொருளாதாரத்தின் பெரும் பங்கை தந்தையின் தோள் தான் சுரக்கிறது என்று அவர் சொன்னார்.

அயராமல் உழைப்பதும், குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதும், பிள்ளைகளைச் சிறிது கண்டிப்போடு வளர்ப்பதும் ஒரு தந்தையின் கடமை. காலம் மாறிவிட்டது குழந்தைகளிடம் நட்பு முறையில் பழக வேண்டும் என்று நாம் சொன்னாலும், தந்தைக்கே உரிய அந்த கண்டிப்பு இருக்கத்தான் வேண்டும்.

இப்படித் தன் குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் உழைக்கும் தந்தையின் அர்ப்பணிப்பைப் போற்றுவதற்கு இந்த ஒரு நாள் மட்டும் போதுமா?

ஒவ்வொரு நாளும் மதித்துப் போற்றத் தக்கவர் தந்தை என்றாலும் இந்த ஒரு நாள் முழுவதும் அவருக்காக ஒதுக்கி அன்பு பாராட்டுவோம். வயதான காலத்ததந்தையரை, தந்தையரை முதியோர் இல்லத்தில் விடாமல் அரவணைத்து காப்போம் என்று டத்தோஸ்ரீ சரவணன் தமது வாழ்த்துச் செய்தியில் கேட்டுக்கொண்டார்.

மீண்டும் தந்தையர் தின நல்வாழ்த்துகள்.



Read More

Previous Post

சில்லறை முதலீட்டாளர்கள் எப் அண்ட் ஓ வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம்: என்எஸ்இ தலைவர் எச்சரிக்கை | Retail investors should avoid FnO trading: NSE chief

Next Post

மஸ்க்கின் சம்பளம் 56 பில்லியன் டொலர்

Next Post
மஸ்க்கின் சம்பளம் 56 பில்லியன் டொலர்

மஸ்க்கின் சம்பளம் 56 பில்லியன் டொலர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin