சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண் ஒருவருக்கு ஒன்பது மாத சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மியான்மரைச் சேர்ந்த 31 வயதுமிக்க வீட்டுப் பணிப்பெண் தனது முதலாளிக்கு நம்பிக்கை மோசடி செய்து திருட்டு வேலையில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
தனது வயதான முதலாளிகளிடமிருந்து 30 நாளில் மொத்தம் S$12,000 வெள்ளியை அவர் திருடியதாக குற்றம் நிரூபிக்கப்பட்டு தற்போது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
81 வயதுமிக்க முதலாளி பெண் மற்றும் அவரது 82 வயது கணவரை பராமரிக்கும் வேலையை அந்த பணிப்பெண் செய்து வந்தார், ஹௌகாங் அவென்யூ 8 இல் அவர்களது வீடு உள்ளது.
பணிப்பெண் அடிக்கடி ஆண் முதலாளிக்கு உதவியாக அவருடன் பணம் எடுக்க ATM சென்றுள்ளார், அப்போது அவரது ATM அட்டைக்கான பின் குறியீட்டை அவர் மனனம் செய்து வைத்துள்ளார்.
மேலும் முதலாளி பர்ஸ் வைக்கும் இடத்தையும் அவர் நோட்டமிட்டு வைத்திருந்துள்ளார்.
2023 டிசம்பர் 5 முதல் 2024 ஜனவரி 13 வரை, பணிப்பெண் 11 முறை முதலாளியின் ATM அட்டையைத் திருடி, ஒவ்வொரு முறையும் S$500 முதல் S$1,500 வரையிலான பணத்தை எடுத்துள்ளார்.
சில நாட்களில் இரண்டு முறை என சுமார் 30 நாளுக்குள் அவர் மொத்தமாக S$12,000 திருடியதாக சொல்லப்பட்டுள்ளது.
தனது தந்தைக்கு மருத்துவ சிகிச்சை மேற்கொண்டதால் தனது தாயார் குறிப்பிடத்தக்க அளவு பெரிய கடனில் இருப்பதாகவும், வீட்டிலிருந்து பலமுறை துயரகரமான தொலைபேசி அழைப்புகள் வந்ததால் தான் இவ்வாறு நடந்து கொண்டதாகவும் பணிப்பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார் என சின் மின் செய்தி கூறியுள்ளது.
மேலும் தனது இந்த குற்றச் செயல்களுக்கு வருத்தம் தெரிவிப்பதாகவும், மன்னிப்பு கோருவதாகவும் அவர் நீதிமன்றத்தில் கூறினார்.
இருப்பினும், அவர் எந்த இழப்பீடும் திரும்ப செலுத்தவில்லை என்பதையும் நீதிமன்றம் குறிப்பிட்டது.
சிங்கப்பூரில் இருந்து கோவை – இருவர் கைது
PHOTO: SHIN MIN DAILY NEWS

