• Login
Monday, October 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தந்தேராஸ்: தங்கம் வாங்க போறீங்களா? நீங்க வாங்குற தங்கம் ஒரிஜினலா? உங்கள் மொபைலில் ஈஸியா கண்டுபிடிக்கலாம்! | Planning to buy gold jewellery this Dhanteras? Learn how to check gold purity beyond hallmarking, understand HUID verification, inspect bills and know the important checks to make before paying.

GenevaTimes by GenevaTimes
October 26, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தந்தேராஸ்: தங்கம் வாங்க போறீங்களா? நீங்க வாங்குற தங்கம் ஒரிஜினலா? உங்கள் மொபைலில் ஈஸியா கண்டுபிடிக்கலாம்! | Planning to buy gold jewellery this Dhanteras? Learn how to check gold purity beyond hallmarking, understand HUID verification, inspect bills and know the important checks to make before paying.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தந்தேராஸ்: தங்கம் வாங்க போறீங்களா? நீங்க வாங்குற தங்கம் ஒரிஜினலா? உங்கள் மொபைலில் ஈஸியா கண்டுபிடிக்கலாம்!

இந்தியாவில் நவம்பர் தொடங்கி டிசம்பர் வரையில் பண்டிகை காலம். வழக்கமாக இக்கால கட்டத்தில் தங்க நகை விற்பனை அதிகரிக்கும். சிலர் நகைகளாக வாங்குவார்கள், சிலர் நாணயம் அல்லது கோல்ட் பார் வாங்குவார்கள். அதுவும் தீபாவளி பண்டிகை, அக்ஷய திருதியை மற்றும் தந்தேராஸ் போன்ற பண்டிகைகள் ஒன்றாக வருவதால் தங்கத்திற்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு தந்தேராஸ் பண்டிகை நவம்பர் 6-ஆம் தேதி அன்று கொண்டாடப்படவுள்ளது.

தந்தேராஸ் ஏராளமானோர் கொண்டாடப்படும் பண்டிகையாகும். அதுவும் வடமாநிலத்தவர் இந்த பண்டிகை அன்று தங்கம் வாங்குவதை மங்களகரமானதாக கருதுவார்கள். தந்தேராஸ் அல்லது தந்த்ரயோதசி அன்று குபேரன் மற்றும் தன்வந்திரி பகவானை வழிபடுவது சிறப்பாகும். அன்றைய தினம் தங்கம், வெள்ளி, ஆபரணங்கள், பாத்திரங்கள் போன்ற புதிய பொருட்களை வாங்குவது செல்வ செழிப்பை பெற்று தரும் என்பது நம்பிக்கை.

தந்தேராஸ்: தங்கம் வாங்க போறீங்களா? நீங்க வாங்குற தங்கம் ஒரிஜினலா?  உங்கள் மொபைலில் ஈஸியா கண்டுபிடிக்கலாம்!

நீங்களும் தந்தேராஸ் பண்டிகை அன்று தங்கம் வாங்க திட்டமிட்டிருந்தால் வாங்கும் தங்கத்தின் தூய்மை எப்படி இருக்கிறது என்பதை உறுதிப்படுத்துவது அவசியம். குறிப்பாக உள்ளூர் நகைக் கடைகளில் தங்கம் வாங்கும் போது சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

ஹால்மார்க் முத்திரையை மட்டும் பார்க்கக் கூடாது: தங்கம் வாங்கும் போது பெரும்பாலான வாடிக்கையாளர்கள் முதலில் பார்ப்பது என்னவோ ஹால்மார்க் முத்திரையைத் தான். அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பால் முறையாக பரிசோதிக்கப்பட்ட தங்கம் தானா என்பதை தெரிந்து கொள்வதற்கு தாராளமாக ஹால்மார்க் முத்திரையை பார்க்கலாம். இந்த முத்திரையை இந்திய தர நிர்ணய ஆணையம் வழங்குகிறது. ஆனால் போலியான BIS ஹால்மார்க் முத்திரை பதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. இதற்கு தீர்வாக தான் இந்திய அரசு ஹால்மார்க் யுனிக் ஐடென்டிபிகேஷன் (HUID) என்ற 6 இலக்க குறியீட்டை கொண்டு வந்துள்ளது.

HUID மூலம் தங்கத்தின் தரத்தை சரிபார்ப்பது எப்படி?: 6 இலக்க எண் மற்றும் எழுத்தை கொண்ட HUID-யை வைத்து அது உண்மையான தங்கம் தானா? என்பதை மொபைல் மூலம் எளிதில் சரிபார்க்கலாம். இந்த HUID, BIS முத்திரைக்கு மிக அருகிலேயே பொறிக்கப்பட்டிருக்கும். இந்த 6 இலக்க குறியீட்டை முதலில் பார்க்கவும். பின்னர் உங்கள் மொபைலில் BIS Care என்ற ஆப்-பை ப்ளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோர் மூலம் டவுன்லோட் செய்து கொள்ளவும்.

Verify HUID என்பதைத் தேர்ந்தெடுத்து.. நகையில் இருக்கும் அந்த 6 இலக்க HUID நம்பரை என்டர் செய்யவும். இப்போது திரையில் அந்த நகையை விற்ற கடைக்காரர் விவரங்கள், ஹால்மார்க் முத்திரை பதிவு செய்யப்பட்ட தேதி, எந்த ஆய்வு மையத்தில் தங்கத்தின் தரம் பரிசோதிக்கப்பட்டது என்ற விவரங்கள் அனைத்தும் தெரியவரும். திரையில் காண்பிக்கப்படும் விவரங்களையும் நீங்கள் நகை வாங்கும் போது கடைக்காரர் கொடுத்த பில்லையும் ஒப்பிட்டு பார்த்தால் போதும்.. மற்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம்.

உங்களிடம் பிஐஎஸ் ஹால்மார்க் பொறிக்கப்படாத நகை இருந்தாலும் சரி.. அதை ஹால்மார்கிங் மையத்திற்கு கொண்டு சென்று பெயரளவு கட்டணம் செலுத்தி அது உண்மையான தங்கமா? என்பதை பரிசோதிக்கலாம்.

தங்கத்தின் தூய்மையில் பிரச்சனை இருந்தால் என்ன நடக்கும்?: வாடிக்கையாளர்கள் கொண்டுவரும் ஹால்மார்க் முத்திரையிடப்பட்ட தங்கத்தின் தூய்மை குறைவாக இருந்தால்.. பிஐஎஸ் விதிகளின்படி அதை வாங்கியவர் இழப்பீடு பெற முடியும்.

BIS இணையதள தகவல் படி, தங்கத்தின் தூய்மை குறைவாக இருந்தால்.. அதற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை.. நகையின் எடையில் தூய்மை எவ்வளவு குறைகிறதோ? அதன் மதிப்பை விட இரண்டு மடங்கு இருக்கும். அதோடு சேர்த்து அதை வாங்கிய வாடிக்கையாளர் பரிசோதனைக்காக செலவு செய்யும் கட்டணத்தையும் சேர்த்து வழங்க வேண்டும்.

2026-ஆம் ஆண்டு ஜனவரி 29-ஆம் தேதி அன்று 10 கிராம் தங்கம் ரூ.1,80,779 என்ற உச்ச விலையை எட்டியது. அதிலிருந்து பார்க்கும்போது தற்போது தங்கத்தின் விலை ரூ.38,600-க்கும் அதிகமாக சரிந்துள்ளது. இந்த விலை இறக்கத்தை நகை வாங்குபவர்கள் பயன்படுத்திக் கொள்வது சிறப்பு.

Share This Article

Story first published: Monday, October 26, 2026, 19:37 [IST]

Other articles published on Oct 26, 2026

Read More

Previous Post

வாங்குன அடி அந்த மாதிரி.. மிக மோசமாக சரிந்த ஐபோன் விற்பனை.. வேற வழியில்லாமல் ஆப்பிள் எடுத்த முடிவு | Apple May Launch iPhone 18, iPhone 18e and iPhone Air 2 in Early 2027, Why sudden shift in timeline

Next Post

புகைமூட்ட நெருக்கடிக்குக் காரணமான காட்டுத் தீயில் தொடர்புடைய மலேசியாவுடன் இணைக்கப்பட்ட 21 நிறுவனங்களை இந்தோனேசிய தன்னார்வத் தொண்டு நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. – Malaysiakini

Next Post

புகைமூட்ட நெருக்கடிக்குக் காரணமான காட்டுத் தீயில் தொடர்புடைய மலேசியாவுடன் இணைக்கப்பட்ட 21 நிறுவனங்களை இந்தோனேசிய தன்னார்வத் தொண்டு நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin