Last Updated:
Bihar Assembly Election 2025 | பிகாரில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நிதிஷ்குமார் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
பிகாரி என்பது இனி அவதூறு சொல்லாக இருக்காது, என முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பிகார் சட்டப்பேரவைக்கு வரும் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் களம் களைகட்டிய நிலையில், பாஜக, ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ், ஆர்ஜேடி அடங்கிய மகாகத்பந்தனும் வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றன. அதேபோல அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் ஆட்சியை கடுமையாக விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தாம் ஆட்சிக்கு வந்த போது பிகாரின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததாக கூறினார். கடுமையாக உழைத்து அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை கொண்டு வந்துள்ளதாக தெரிவித்தார்.
குறிப்பாக பிகாரி என்பது ஒரு காலத்தில் அவதூறு சொல்லாக இருந்ததாகவும், அதனை மாற்ற கடுமையாக உழைத்ததாகவும் அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.
November 01, 2025 5:06 PM IST
Bihar Election | “என்.டி.ஏ கூட்டணியால் மட்டும்தான் பிகாரில் வளர்ச்சியை கொண்டுவர முடியும்” – பிகார் முதல்வர் நிதிஷ்குமார்


