Last Updated:
அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக ஆஸ்திரேலியாவில் ஏற்கெனவே எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள தீ விபத்து கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால், எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மெல்போர்னின் தென்மேற்கில் உள்ள கீ லாங் என்ற பகுதியில் விவா எனர்ஜி என்ற நிறுவனத்திற்கு சொந்தமான சுத்திகரிப்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இதில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விக்டோரியா மாநிலத்தின் எரிபொருள் தேவையில் 50 விழுக்காடும், ஒட்டுமொத்த ஆஸ்திரேலியாவின் தேவையில் 10 சதவிகிதமும், இந்த ஆலை மூலம் பூர்த்தி செய்யப்பட்டு வந்தது. எனவே, இந்த தீ விபத்தால், எரிபொருள் விநியோகம் தடைப்பட்டு, பெட்ரோல் விலை உயரும் என அஞ்சப்படுகிறது.
ஆஸ்திரேலியா தனது எரிபொருள் தேவையில் 80 விழுக்காட்டிற்கும் மேல் இறக்குமதியை சார்ந்துள்ளது. அமெரிக்கா-ஈரான் போர் காரணமாக ஏற்கெனவே எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தீ விபத்து கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Apr 18, 2026 10:48 AM IST


