ஷா ஆலம்:
பெட்டாலிங் மாவட்டத்தில் உள்ள இரண்டு மீன் கடைகள் ஆன்லைன் விற்பனை என்ற போர்வையில் தடைசெய்யப்பட்ட மீன்களை விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சிலாங்கூர் மீன்வளத் துறை நேற்று நடத்திய சோதனைக்குப் பிறகு அந்தக் கடைகளின் தந்திரம் வெளிச்சத்திற்கு வந்தது.
இந்த சோதனையில் ஸ்பாட் கார், பீகாக் பாஸ், அமேசான் ரெட் டெயில் கேட்ஃபிஷ், டைகர் ஷோவெல்னோஸ் கேட்ஃபிஷ், எம்பரர் ப்ளூ ஹூக், அரபைமா மற்றும் சில்வர் டாலர் போன்ற பல்வேறு வகையான 174 மீன்களை பறிமுதல் செய்ததாக சிலாங்கூர் மீன்வளத் துறை இயக்குநர் நோரைஸ்யா அபு பக்கர் தெரிவித்தார்.
“சம்பந்தப்பட்ட இரண்டு கடைகளுக்கு எதிராக விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன,” என்று அவர் நேற்று இரவு வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.