காவல் நிலைய தடுப்புக்காவலில் இருந்தபோது உயிரிழந்த சந்தேக நபர் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஹோமாகம காவல் நிலைய குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி இன்று (29) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
ஹொரணை, பலப்பிட்டியைச் சேர்ந்த 32 வயதான குறித்த அதிகாரி நேற்று (28) பிற்பகல் கைது செய்யப்பட்டார்.
மூவர் பணியிடை நீக்கம்
காவலில் இருந்த சந்தேக நபர் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணையின் ஒரு பகுதியாக இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ஹோமாகம காவல் நிலைய குற்றப்பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட மூன்று அதிகாரிகள் ஒக்டோபர் 26ஆம் திகதி முதல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

