• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தடாலடியாக உயரும் தங்கம் விலை.. ஒரேயொரு டேட்டா, மொத்தமும் மாறியது.. அமெரிக்காவில் விடிந்ததும் ரியாக்ஷன்! | Gold Surges to 7-Month High at $4,371 After Weak US Jobs Data Sparks Rate Cut Hopes

GenevaTimes by GenevaTimes
August 8, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தடாலடியாக உயரும் தங்கம் விலை.. ஒரேயொரு டேட்டா, மொத்தமும் மாறியது.. அமெரிக்காவில் விடிந்ததும் ரியாக்ஷன்! | Gold Surges to 7-Month High at $4,371 After Weak US Jobs Data Sparks Rate Cut Hopes
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தடாலடியாக உயரும் தங்கம் விலை.. ஒரேயொரு டேட்டா, மொத்தமும் மாறியது.. அமெரிக்காவில் விடிந்ததும் ரியாக்ஷன்!

தங்கம் விலை மந்த நிலையில் இருந்து மீண்டும் வளர்ச்சி பாதைக்கு திரும்பியுள்ளது, வெள்ளிக்கிழமை அமெரிக்காவின் ஜூலை மாத விவசாயம் அல்லாத வேலைவாய்ப்புகள் குறித்த தரவுகள் வெளியானதில் இருந்து தங்கம் விலை 7 மாத உச்சத்தை தொட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளது.

வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்றைய வர்த்தகத்தில் அமெரிக்க வர்த்தகம் துவங்கியதும் உயர்வுடனே துவங்கினாலும், வேலைவாய்ப்பு தரவுகள் வெளியான பின்பு ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 2.7 சதவீதம் வரையில் உயர்ந்து 4,371.89 டாலராக உள்ளது. இதேபோல் வெள்ளி விலை 3.5 சதவீதம் வரையில் உயர்ந்து ஒரு அவுன்ஸ் 65.14 டாலராக உள்ளது.

தடாலடியாக உயரும் தங்கம் விலை.. ஒரேயொரு டேட்டா, மொத்தமும் மாறியது.. அமெரிக்காவில் விடிந்ததும் ரியாக்ஷன்!

இதன் மூலம் தங்கம் ஒரு வாரத்தில் 7.43 சதவீதமும், வெள்ளி 10.27 சதவீதமும் உயர்ந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு இன்று காலை ரீடைல் சந்தையில் கட்டாயம் எதிரொலிக்கும்.

சரி தங்கம் விலை ஏன் உயர்ந்தது..? இதற்கான காரணம் என்ன..?

அமெரிக்காவின் ஜூன் மாத விவசாயம் அல்லாத வேலைலாய்ப்புகள் எண்ணிக்கை 80000 அதிகரிக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், 20000 குறைந்தாக அந்நாட்டின் தொழிலாளர் புள்ளியியல் துறை இத்தரவுகள் வெளியிட்டு உள்ளது.

சரி இதற்கும் தங்கம் விலை உயர்வுக்கும் என்ன தொடர்பு..? இத்தரவுகள் மூலம் அமெரிக்க வேலைவாய்ப்பு சந்தை மிகவும் மோசமாக இருப்பது உறுதியாகியிருக்கும் காரணத்தால் அமெரிக்க பெடரல் ரிசர்வ் அடுத்த செப்டம்பர் கூட்டத்தில் வட்டி விகிதம் உயர்த்த வேண்டிய கட்டாயம் இருக்காது.

கடந்த வாரம் முடிந்த கூட்டத்தில் போர் அச்சம் காரணமாக நாட்டில் பணிவீக்கம் அதிகரித்து வரும் வேளையில், கடைசி 2 மாதங்களாக வேலைவாய்ப்பு சந்தை சிறப்பான வளர்ச்சியில் இருந்த காரணத்தால் வட்டி விகிதம் உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது வேலைவாய்ப்பு சந்தை 20000 பேர் குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது, அதேபோல் ஈரான் உடனான பேச்சுவார்த்தை மூலம் கச்சா எண்ணெய் விலையும் குறைந்துள்ளது. இதனால் வட்டி உயர்வுக்கான தேவை குறைந்துள்ளது. இதன் வெளிப்பாடு தான் தங்கம் விலை உயர்வு.

வட்டி விகிதம் குறைக்காமல், பணவீக்கமும் குறைந்தால் டாலர் மதிப்பு கட்டாயம் குறையும் என்ற கணிப்பில் NEP டேட்டா வெளியானதும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் கடந்த 7 நாட்களில் 3 நாட்களில் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு ரீடைல் சந்தை விலை வெளியாகும்.

இதன் வாயிலாக 4000-4100 டாலரில் மட்டுமே வர்த்தகமான தங்கம் விலை 4,371.89 டாலராக உயர்ந்து உள்ளது. இதன் மூலம் அடுத்த சில நாட்களில் 5000 டாலரை தாண்டுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தங்கத்தின் 52 வார உயர்வான விலை 5,595.46 டாலராகும்.

இதற்கு மத்தியில் தங்கத்தை காட்டிலும் வெள்ளி வேகமாக வளர்வது முதலீட்டாளர்களுக்கு முக்கியமான முதலீட்டு வாய்ப்பாக விளங்குகிறது.

Share This Article

English summary

Gold Surges to 7-Month High at $4,371 After Weak US Jobs Data Sparks Rate Cut Hopes

Gold Surges to 7-Month High at $4,371 After Weak US Jobs Data Sparks Rate Cut Hopes — தடாலடியாக உயரும் தங்கம் விலை.. ஒரேயொரு டேட்டா, மொத்தமும் மாறியது.. அமெரிக்காவில் விடிந்ததும் ரியாக்ஷன்!

Story first published: Saturday, August 8, 2026, 8:56 [IST]

Other articles published on Aug 8, 2026

Read More

Previous Post

ரத்தக்களறியான இலங்கை சிறைகள்.. கைதிகள் வன்முறையில் 3 பேர் பலி.. குவிக்கப்படும் போலீசார்! | Sri Lanka Deploys Troops to 3 Prisons After Unrest Leaves 3 Inmates Dead, 23 Injured

Next Post

ஈரான்: “உயிருடன் இருக்கிறாரா மொஜ்தபா கமேனி?” – இஸ்ரேல் ஊடகங்கள் சொல்லும் தகவல்!? | Israeli media have released new information regarding Iran’s Supreme Leader, Mojtaba Khamenei.

Next Post
ஈரான்: “உயிருடன் இருக்கிறாரா மொஜ்தபா கமேனி?” – இஸ்ரேல் ஊடகங்கள் சொல்லும் தகவல்!? | Israeli media have released new information regarding Iran’s Supreme Leader, Mojtaba Khamenei.

ஈரான்: ``உயிருடன் இருக்கிறாரா மொஜ்தபா கமேனி?" - இஸ்ரேல் ஊடகங்கள் சொல்லும் தகவல்!? | Israeli media have released new information regarding Iran's Supreme Leader, Mojtaba Khamenei.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin