கோலாலம்பூர்:
தஞ்சோங் லோம்பாட் கடற்கரையில் நீரில் மூழ்கி மாயமான 16 வயதுச் சிறுவனின் உடல், நான்கு நாட்கள் தீவிரத் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளுக்குப் பிறகு (SAR) இன்று பிற்பகல் தஞ்சோங் சியாங் பாறைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
மீட்கப்பட்ட உடல், மாயமான முகமட் ஹைமன் ஃபித்ரி சுபியான் (16) என்பவருடையது என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
“இன்று பிற்பகல் 3.05 மணியளவில், சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 5.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பாறைப் பகுதியில் உடலை பொதுமக்கள் பார்த்துள்ளனர். சிறுவன் முழு ஆடைகளுடன் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். பிரேதப் பரிசோதனைக்காக உடல் கோத்தா திங்கி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
கடந்த புதன்கிழமை, ஆறு சிறுவர்கள் தஞ்சோங் லோம்பாட் கடற்கரையில் மகிழ்ச்சியாகக் குளித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அலைகளில் சிக்கினர். அவர்களில் இருவரைப் பொதுமக்கள் உடனடியாகக் காப்பாற்றினர்.
இருப்பினும், மற்ற நான்கு சிறுவர்கள் நீரில் மூழ்கி மாயமாகினர். தொடர்ந்து நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் மூவரின் உடல்கள் அடுத்தடுத்து மீட்கப்பட்ட நிலையில், தற்போது கடைசி சிறுவனின் உடலும் கண்டெடுக்கப்பட்டு மீட்புப் பணி நிறைவடைந்துள்ளது. பலியான நான்கு சிறுவர்களுமே 16 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
The post தஞ்சோங் லோம்பாட்டில் மாணவர்கள் உயிரிழந்த சோகம்: 4 நாள் போராட்டத்திற்குப் பின் கடைசி உடலும் மீட்பு! appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

