• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தஞ்சோங் அசாம் தொலைத்தொடர்புத் திட்டம்; தெலுக் கும்பாரில் B40 பிரிவினருடனான தொடர்பை வலுப்படுத்தியுள்ளது

GenevaTimes by GenevaTimes
December 17, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
தஞ்சோங் அசாம் தொலைத்தொடர்புத் திட்டம்; தெலுக் கும்பாரில் B40 பிரிவினருடனான தொடர்பை வலுப்படுத்தியுள்ளது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையத்தின் ஏற்பாட்டில் சிலாங்கூர் தொடர்பு வாரியம் Konsortium Jaringan Selangor (KJS) முன்னெடுக்கும் ‘ஒருங்கிணைந்த வழி எங்கே உள்ளது, அங்கே இணையம் இருக்கிறது’ எனும் தொடர்புத் திட்டமானது, பினாங்கு, தெலுக் கும்பார், தஞ்சோங் அசாம் பகுதியில் 4G – 5G தொடர்பு வளையம், இணைய வசதியை வெற்றிகரமாகக் கிடைக்கப்பெறச் செய்துள்ளது.

இந்த நடவடிக்கை குறைந்த அளவில் இணைய தொடர்புச்சேவை கிடைக்கப்பெறும் பகுதிகளில் டிஜிட்டல் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் ஒரு முக்கியமான மைல்கல் என்று, அண்மையில் இந்தத் திட்டத் தளத்திற்கு வருகை புரிந்த பினாங்கு மாநில சட்ட மன்ற உறுப்பினர் ஸைரில் கிர் ஜொஹாரி கூறினார்.

“எங்கே சாலை இருக்கிறதோ, அங்கே இணையம் இருக்கிறது” என்ற லட்சியத்தை நனவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முக்கியம் பெறும் என்று கூறிய அவர், இந்த கோபுரம் 2024 டிசம்பரில் முழுமையாக கட்டி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், பினாங்கை ஒரு விவேகமான, பசுமையான மற்றும் சிறப்பாக வாழக்கூடிய மாநிலமாக மாற்ற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்” என்று அவர் ஒரு அறிக்கையின் மூலம் தெரிவித்தார்.

அதேபோல் இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள YTL Communications நிறுவனம், இங்கு அமைக்கப்பட்டுள்ள தொடர்பு கட்டடமானது தஞ்சோங் அசாம் பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை தொடர்பு வளையத்தை ஏற்படுத்தித் தருகிறது.

இந்தத் திட்டத்திற்குத் தொடர்பு கட்டமைப்புத் தரப்பினராக KJS, மலேசியா முழுவதும் விரிவான தொடர்பு, உயர்வேக இணையச் சேவையை வழங்கும் YTL குழுமமும் இணைந்து செயல்படுகின்றன.

இந்தத் திட்டத்தில் ஜாலான் கெர்த்தா சங்குல் பகுதியில் 4 வாரத்தில் 60 மீட்டர் உயரமுள்ள தொலைத்தொடர்புக் கட்டடம் எழுப்பப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் வசிக்கும் B40 பிரிவினர், மீனவர்கள் என 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நன்மை அளிக்கிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் டிஜிட்டல் தொடர்புகளை அதிகரிப்பதற்கான மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையத்தின் (MCMC) முன்னெடுப்பிற்கு இவ்விரு தரப்புகளும் தொடர்ந்து ஆதரவு வழங்குவதில் பொறுப்புடன் செயல்படுகின்றன.

குறிப்பாக முதல்கட்ட ஜெண்டேலா (JENDELA) திட்டத்தின் கீழ் 81 தொலைத்தொடர்புக் கட்டடங்களை KJS வெற்றிகரமாகக் கட்டி முடித்ததுள்ளதுடன், B40 பிரிவினர் வசிக்கும் பகுதிகள், உட்புறப் பகுதிகளில் 4G இணைய வசதியை ஏற்படுத்தித் தருவதில் 2ஆவது கட்ட ஜெண்டேலா திட்டத்தில் 70 விழுக்காட்டுப் பணிகளை YTLC நிறைவு செய்ததும் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

இதன் அடிப்படையில் ஜெண்டேலா திட்டத்தில் மீதமுள்ள 30 விழுக்காட்டுப் பணிகள் இவ்வாண்டு இறுதியில் நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே 26 ஆண்டுகால நிபுணத்துவ அனுபவத்தோடு KJS தரப்பு புவியியல் சார்ந்த பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும் குறுகிய காலகட்டத்தில் தரம் வாய்ந்த தொடர்பு கட்டமைப்பை நிறைவுசெய்வதில் தமது திறமையை வெளிக்காட்டியுள்ளது.

அதேபோல் YTLC (YES) தரப்பு தேசிய டிஜிட்டல் உருமாற்ற முயற்சிக்கு ஆதரவு அளிப்பதோடு விரிவான, உயர் வேகமிக்க இணைய வசதியையும் ஏற்பாடு செய்து தருகிறது. இந்தத் திட்டமானது B40 பிரிவினரை வலுப்படுத்துவது, டிஜிட்டல் தொடர்புத் தரத்தை உயர்த்துவது, உள்நாட்டு சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவு அளிப்பதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post தஞ்சோங் அசாம் தொலைத்தொடர்புத் திட்டம்; தெலுக் கும்பாரில் B40 பிரிவினருடனான தொடர்பை வலுப்படுத்தியுள்ளது appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

வங்கி ஊழியர்களுக்கு 5 நாள் வேலை வாரம் எப்போது செயல்படுத்தப்படும்…? தெரிஞ்சுக்கலாம் வாங்க…

Next Post

கல்வித்தகைமைகள் நாளை சமர்க்கப்படும் : அநுர தரப்பிற்கு சஜித் பதிலடி

Next Post
கல்வித்தகைமைகள் நாளை சமர்க்கப்படும் : அநுர தரப்பிற்கு சஜித் பதிலடி

கல்வித்தகைமைகள் நாளை சமர்க்கப்படும் : அநுர தரப்பிற்கு சஜித் பதிலடி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin