தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் காமராஜர் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டிற்கு கரூர், தூத்துக்குடி, தேனி, பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், ஆந்திரா கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும்.
இங்குள்ள மொத்த வியாபாரிகளிடமிருந்து சில்லறை வியாபாரிகள் காய்கறிகளை வாங்கிக்கொண்டு தஞ்சை மாவட்டம் முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர்.இந்த நிலையில் சில காய்கறிகளின் வரத்து அதிகரித்துள்ளதாலும், ஒரு சில காய்கறிகள் வரத்து குறைந்துள்ளதாலும் இந்த மார்க்கெட்டில் காய்கறிகள் சராசரி விலையில் விற்பனையாகி வருகிறது.
மேலும், நாட்டு காய்கறிகள் விலை சரிந்துள்ளது. அதன்படி ஏப்ரல் 3ஆம் தேதி விலைநிலவரப்படி, கத்தரிக்காய் கிலோ ரூ.20 க்கும், கேரட் கிலோ 60-க்கும், கொத்தவரங்காய் கிலோ ரூ.20-க்கும், முருங்கைக்காய் கிலோ ரூ.10-க்கும், வெண்டைக்காய் கிலோ ரூ.20க்கும், புடலங்காய் கிலோ ரூ.20 க்கும், மாங்காய் கிலோ ரூ.40க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், பாகற்காய் கிலோ ரூ. 30க்கும், பல்லாரி கிலோ ரூ.40க்கும், தக்காளி கிலோ ரூ.30க்கும், உருளைகிழங்கு கிலோ ரூ.40க்கும், பீட்ரூட் கிலோ ரூ.40க்கும், பீன்ஸ் கிலோ ரூ.80க்கும், முட்டைக்கோஸ் கிலோ ரூ.40க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், மற்ற காய்கறிகள் கிலோ ரூ.40 மற்றும் அதற்கு குறைவான விலையிலேயே விற்பனை செய்யப்பட்டது.
மேலும், இது குறித்து வியாபாரி கூறுகையில், “அடுத்த மூன்று மாதத்திற்கு இந்த விலை நிலவரம் தான் இருக்கும். ஒரு சில காய்கறி விலையில் மட்டும் அவ்வப்போது மாற்றம் ஏற்படும். கோவில் திருவிழாக்கள், விசேஷ நாட்களில் மட்டுமே விலை அதிகரித்து காணப்படும். தொடர்ந்து பள்ளி விடுமுறை விடும் நாட்கள் என்பதால் பெரிதளவில் விலை ஏற்றம் இருக்காது” என்றார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக்
செய்க
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…