இஸ்ரேல் காவல்துறை வாகனம்
இஸ்ரேல் சட்டவிரோதமாக 7 ஆயிரம் ஆப்ரிக்க தஞ்சம் கோரிகளை அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டதாக ஹூமன் ரைட்ஸ் வாட்ச் தெரிவித்துள்ளது.
சொந்த நாட்டுக்கு அனுப்பப்பட்டவர்களில் சிலர் அச்சுருத்தலை சந்திக்கும் சூழலில் இருப்பதாகவும் அந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
எரித்ரியா மற்றும் சூடானைச் சேர்ந்தவர்களை தனது கடினமான சட்ட நடைமுறைகளுக்கு உட்படுத்தி அவர்களுக்கு தஞ்சம் கிடைக்காத நிலையை இஸ்ரேல் உருவாக்குவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
ஆப்ரிக்க தஞ்சம் கோரிகளை இஸ்ரேல் நடத்தும் முறை குறித்து பல மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டுள்ளன. இஸ்ரேலுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றவர்களை சட்டரீதியாக கையாள்வதாக அந்நாட்டு உள்துறை அமைச்சு கூறியுள்ளது.