Last Updated:
தஜிகிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் 30 வீடுகள் சேதமடைந்தன, 3 வயது குழந்தை உயிரிழந்தது. இந்தியா, மியான்மரிலும் நில அதிர்வு உணரப்பட்டது.
தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
கடந்த மார்ச் மாதம், மியான்மரின் மாண்டலே நகர் அருகில் ரிக்டர் அளவுகோலில் 7.7 என்ற அளவிலும், 6.4 என்ற அளவிலும் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோ மீட்டர் என்ற குறுகிய ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால், மியான்மிரில் கட்டிடங்கள் இடிந்து விழுந்து, சாலைகள் பெயர்ந்தன. இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டில் 3,000க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக பலியாகினர்.
இந்நிலையில், இன்று மீண்டும் மியன்மார், இந்தியா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இமாச்சலப்பிரதேசத்தின் மண்டியில் காலை 9 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டது. பூமியில் 5 கி.மீ., ஆழத்தில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள் : எச்சரிக்கை விடுத்த அடுத்த நொடியே நடந்த பயங்கரம்.. காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்
அதேபோல், தஜிகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தன. அந்நாட்டின் ரஷ்த் மாவட்டத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.0 புள்ளிகளாக பதிவானது. சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 வயது குழந்தை ஒன்றும் உயிரிழந்தது. ரஷ்த் மாவட்டத்தில் தரைக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
சக்தி வாய்ந்த நிலநடுக்கம் சில நொடிகள் நீடித்த நிலையில், சூப்பர் மார்க்கெட்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்கள் சரிந்து விழுந்தன. இதேபோல் இந்தியாவின் அண்டை நாடான மியான்மரிலும் காலையிலேயே நில அதிர்வு உணரப்பட்டது.
April 13, 2025 8:32 PM IST


