உலகின் மிக விலையுயர்ந்த கனிமம் ஜேடைட்(Jadeite) ஆகும். பலர் இதுப்பற்றி கேள்விப்படாமல் இருக்கலாம். 2025ஆம் ஆண்டில், இந்த கனிமம் ஒரு காரட்டுக்கு 3 மில்லியன் டாலர்கள் (அதாவது ரூ.26.35 கோடி) வரை எட்டியது. ஒரு காரட் என்றால் 0.2 கிராம் ஆகும். அதன்படி, 10 கிராம் என்றால் 50 காரட் ஆகும். 24 காரட் தங்கத்தின் 10 கிராம் விலை தோராயமாக ரூ. 1,25,620. ஆனால், ஜேடைட், 10 கிராம் எவ்வளவு தெரியுமா?. இதை கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். இது சுமார் ரூ.1,317.5 கோடி ஆகும். ஆனால், இந்த கனிமம் ஏன் இவ்வளவு விலை உயர்ந்ததாக இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா.


