தங்க வியாபாரி அல்தாஃப் கூற்றுப்படி, பொதுவாக, நகை கடைக்கு சென்று நாம் தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்கும்போது அதை இளஞ்சிவப்பு காகிதத்தில் சுற்றித் தருவார்கள். தற்போது இந்த வழக்கம் பெரும்பாலான கடைகளில் இல்லை என்றாலும், இன்றும் கூட, சில சிறிய நகைக் கடைகளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் இப்படித்தான் சுற்றி வழங்கப்படுகின்றன. ஆனால், இதற்கு என்ன காரணம் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?. இந்த பாரம்பரியத்திற்குப் பின்னால் ஒரு காரணம் இருக்கிறது. அது என்னவென்று தற்போது பார்க்கலாம்.


