• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை தொடர் சரிவு: பவுனுக்கு ரூ.120 குறைந்தது | Gold prices continue to lower, may reach Rs.51,000 per sovereign

GenevaTimes by GenevaTimes
July 26, 2024
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை தொடர் சரிவு: பவுனுக்கு ரூ.120 குறைந்தது | Gold prices continue to lower, may reach Rs.51,000 per sovereign
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: தங்கத்தின் மீதான இறக்குமதி வரி குறைப்பால் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. பட்ஜெட் அறிவிப்புக்குப் பின் தொடர்ந்து 4-வது நாளாக தங்கம் விலை வீழ்ச்சி கண்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று (ஜூலை 26) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.6.415-க்கு விற்கப்படுகிறது. பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.51,320-க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.89-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, அக்டோபர் 4-ம் தேதி பவுன் ரூ.42,280-க்கு விற்பனையானது.

பின்னர் இஸ்ரேல் – பாலஸ்தீன போர் எதிரொலியாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. டிசம்பர் 4-ம் தேதி ரூ.47,800, மார்ச் 28-ம் தேதி ரூ.50,000, ஜூலை 17-ம் தேதி ரூ.55,360 என பவுன் விலை புதிய உச்சங்களை அடைந்தது. பின்னர், சற்று குறைந்தது.

கடந்த 23-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், தங்கம் மீதான இறக்குமதி வரி 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாக, அன்றைய தினமே விலை குறைந்தது. காலையில் பவுன் ரூ.54,480 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், பிற்பகலில் ரூ.52,400 ஆக குறைந்தது.

நேற்று முன்தினம் பவுனுக்கு ரூ.480 குறைந்த நிலையில், நேற்றும் ரூ.480 குறைந்தது. நேற்று ஒரு கிராம் ரூ.6,430-க்கும், ஒரு பவுன் ரூ.51,440-க்கும் விற்பனையானது. இன்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ஒரு பவுன் ரூ.51,320-க்கு விற்பனையாகிறது. கடந்த 4 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.3.160 குறைந்துள்ளது.

இன்னும் எத்தனை நாளைக்கு! ஓரிரு வாரங்களுக்கு விலையில் சற்று ஏற்ற இறக்கம் இருக்கக்கூடும். சர்வதேச அளவில் ஏதேனும் தாக்கம் ஏற்பட்டால் தங்கம் விலை மேலும் குறையும். பவுன் விலை ரூ.50 ஆயிரம் வரை இறங்கவும் வாய்ப்பு உள்ளது. எனினும், ஆடி பதினெட்டுக்கு பிறகு விலை அதிகரிக்கும் என்று நகை வியாபாரிகள் கூறுகின்றனர்.



Read More

Previous Post

Elementor #22649

Next Post

‘அமைதியாக இருக்கப்போவதில்லை’ – காசா பிரச்சினையில் கமலாவின் நிலைப்பாடு என்ன? | I will not be silent: Kamala Harris presses Netanyahu over humanitarian situation in Gaza

Next Post
‘அமைதியாக இருக்கப்போவதில்லை’ – காசா பிரச்சினையில் கமலாவின் நிலைப்பாடு என்ன? | I will not be silent: Kamala Harris presses Netanyahu over humanitarian situation in Gaza

‘அமைதியாக இருக்கப்போவதில்லை’ - காசா பிரச்சினையில் கமலாவின் நிலைப்பாடு என்ன? | I will not be silent: Kamala Harris presses Netanyahu over humanitarian situation in Gaza

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin