• Login
Saturday, September 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை: கிருஷ்ண ஜெயந்தி நாளில் இப்படியா? தடாலடியாக உயர்ந்த தங்கம்..!! | Krishna Jayanthi Gold Price Shock: Chennai 22K Jumps ₹960/Sovereign to ₹1,14,880 as Tamil Nadu Rates Spike on Sept 4, 2026

GenevaTimes by GenevaTimes
September 4, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் விலை: கிருஷ்ண ஜெயந்தி நாளில் இப்படியா? தடாலடியாக உயர்ந்த தங்கம்..!! | Krishna Jayanthi Gold Price Shock: Chennai 22K Jumps ₹960/Sovereign to ₹1,14,880 as Tamil Nadu Rates Spike on Sept 4, 2026
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலை: கிருஷ்ண ஜெயந்தி நாளில் இப்படியா? தடாலடியாக உயர்ந்த தங்கம்..!!

கிருஷ்ண ஜெயந்தி நாளில் தங்கம் விலை தடாலடியாக உயர்ந்து மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. செப்டம்பரில் முதல் 2 நாட்கள் விலை குறைந்த தங்கம் நேற்ற், இன்று என தொடர்ந்து 2 நாட்களாக விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் விலை கூடியுள்ளது. ஒரு கிராமுக்கு 120 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,360 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரே நாளில் 960 ரூபாய் விலை உயர்ந்து அதிர்ச்சி தந்துள்ளது. இன்றைய தினம் ஒரு சவரன் தங்கம் 1,14,880 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் விலை: கிருஷ்ண ஜெயந்தி நாளில் இப்படியா? தடாலடியாக உயர்ந்த தங்கம்..!!

செப்டம்பர் 1 ஆம் தேதி சென்னையில் ஒரு கிராம் ஆபரண தங்கம் 195 ரூபாய் விலை குறைந்து 14,175 ரூபாய்க்கு விற்கப்பட்டது. செப்டம்பர் 2ஆம் தேதி கிராமுக்கு 240 ரூபாய் விலை சரிந்தது. அதாவது இந்த மாதத்தின் முதல் இரண்டு நாட்களில் தங்கம் விலை கிராமுக்கு 435 ரூபாய் விலை சரிந்தது. ஆனால் நேற்று மற்றும் இன்று என இந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை 425 ரூபாய் விலை ஏறிவிட்டது.

24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 131 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிராம் 15,666 ரூபாய்க்கும் 10 கிராம் 1,56,660 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கத்தை பொறுத்தவரை ஒரு கிராம் 12,130 ரூபாய்க்கும் ஒரு சவரன் 97,040 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலை மாறவில்லை, சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 2.55 லட்சத்திற்கும் விற்கப்படுகிறது. செப்டம்பர் 1ஆம் தேதி கிராமுக்கு 10 ரூபாய் விலை குறைந்த வெள்ளி, 2ஆம் தேதி விலை மாறாமல் இருந்தது, ஆனால் நேற்று 5 ரூபாய் கூடிவிட்டது. இன்று எந்த ஒரு விலை மாற்றமும் இல்லாமல் விற்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது, ஆனால் உலக சந்தையில் தங்கம் விலை குறைந்துள்ளது. ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டின் விலை 25 டாலர்கள் குறைந்து 4,467 டாலர்களாக உள்ளது, ஒரு அவுன்ஸ் வெள்ளி 66 டாலர்களாக உள்ளது.

ஆகஸ்ட் மாதம் தங்கம், வெள்ளி விலை வேகமாக உயர்ந்தது. எனவே மீண்டும் ஒரு வரலாற்று உச்சத்தை தொட போகிறதா என்ற அச்சம் ஏற்பட்டது. இந்நிலையில் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் லாபத்தை பதிவு செய்யும் நோக்கத்தில் பலரும் தங்கத்தை விற்க தொடங்கியதால் விலை குறைந்தது. ஆனால் செப்டம்பர் மாதம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போக்கினை தங்கம் காட்டுகிறது. ஒரு நாள் விலை ஏறுவதும் மறுநாள் குறைவதுமாக இருக்கிறது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Krishna Jayanthi Gold Price Shock: Chennai 22K Jumps ₹960/Sovereign to ₹1,14,880 as Tamil Nadu Rates Spike on Sept 4, 2026

தங்கம் விலை: கிருஷ்ண ஜெயந்தி நாளில் இப்படியா? தடாலடியாக உயர்ந்த தங்கம்..!! / Gold prices in Tamil Nadu staged a sharp two-day rebound after early-September dips, with Chennai’s 22K ornament gold rising ₹120/gram (₹960 per sovereign) to ₹14,360/gram and ₹1,14,880 per sovereign on Sept 4, 2026.

Story first published: Friday, September 4, 2026, 10:50 [IST]

Other articles published on Sep 4, 2026

Read More

Previous Post

வீழ்ச்சியடையும் ட்ரம்பின் செல்வாக்கு ! ஈரான் போர் தொடர்பில் ஜே.டி. வான்ஸ் வெளியிட்ட அறிவிப்பு

Next Post

2 கோடி குழந்தைகள் பாலியல் கொடுமை! – ஆய்வில் அதிர்ச்சி தகவல் … | Makkal Osai

Next Post
2 கோடி குழந்தைகள் பாலியல் கொடுமை! – ஆய்வில் அதிர்ச்சி தகவல் … | Makkal Osai

2 கோடி குழந்தைகள் பாலியல் கொடுமை! - ஆய்வில் அதிர்ச்சி தகவல் ... | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin