• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,640 சரிவு: நகை வியாபாரிகள் சொல்வது என்ன? | gold price decreased after akshaya tritya

GenevaTimes by GenevaTimes
May 1, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,640 சரிவு: நகை வியாபாரிகள் சொல்வது என்ன? | gold price decreased after akshaya tritya
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.1,640 குறைந்து, ரூ.70,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. அட்சய திருதியை நாளில் ரூ.13 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.12-ம் தேதி பவுன் ரூ.70,160 ஆகவும், ஏப்.22-ம் தேதி ரூ.74,320 ஆகவும் என அடுத்தடுத்து வரலாறு காணாத அளவில் விலை உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. இருப்பினும், கடந்த 23-ம் தேதி பவுனுக்கு ரூ.2,200 வரை குறைந்து, ரூ.72,120 ஆக இருந்தது. இதன்பிறகு, தங்கம் விலை படிப்படியாக குறைந்து வந்தது. நேற்று தங்கம் விலையில் மாற்றமின்றி காணப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.1,640 குறைந்து, ரூ.70,200-க்கு விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.205 குறைந்து, ரூ.8,775-க்கு விற்பனையானது. 24 காரட் கொண்ட சுத்தத் தங்கம் ரூ.76,576-க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு ரூ.2 குறைந்து, ரூ.109 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,000 குறைந்து, ரூ.1 லட்சத்து 9 ஆயிரமாகவும் இருந்தது.

இதுகுறித்து, தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் கூறும்போது, ‘‘சர்வதேச சந்தையில் நிலையற்ற தன்மை நீடிக்கிறது. இதனால் தங்கம் விலையில் ஏற்ற இறக்கம் ஓரிரு வாரத்துக்கு தொடரும். அட்சய திருதியை நாளில் சில இடங்களில் வியாபாரம் நன்றாகவும், சில இடங்களில் கடந்த ஆண்டு போலவும் இருந்தது. அன்றைய தினம் ரூ.13,000 கோடிக்கு தங்கம் விற்பனை நடைபெற்று உள்ளது’’ என்றனர்.

சென்னை தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி கூறும்போது, “அட்சய திருதியை விற்பனை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு நன்றாக இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, இந்த அட்சய திருதியை நாளில் பவுனுக்கு ரூ.18 ஆயிரம் வரை விலை அதிகமாக இருந்தது. அடுத்த ஆண்டு பவுன் ரூ.80 ஆயிரத்தை தொட்டு விடும். சர்வதேச சந்தையில் தங்கம் பெரிய மாற்றுப் பொருளாக திகழ்கிறது” என்றார்,



Read More

Previous Post

IPL 2025 : ராஜஸ்தானை 100 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது மும்பை அணி.. தரவரிசையில் முதலிடம்

Next Post

பாலியல் துன்புறுத்தல் புகார்கள் காரணமாக கெடா பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவி விலகல் – Malaysiakini

Next Post
பாலியல் துன்புறுத்தல் புகார்கள் காரணமாக கெடா பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவி விலகல் – Malaysiakini

பாலியல் துன்புறுத்தல் புகார்கள் காரணமாக கெடா பள்ளி முதல்வர் மற்றும் துணை முதல்வர் பதவி விலகல் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin