• Login
Wednesday, April 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9000-ஐ நெருங்கியது | Gold rate nears Rs.9000 per gram in Chennai

GenevaTimes by GenevaTimes
April 18, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தங்கம் விலை ஒரு கிராம் ரூ.9000-ஐ நெருங்கியது | Gold rate nears Rs.9000 per gram in Chennai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.9000-ஐ நெருங்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று ஒரு கிராம் ரூ.8945-க்கு விற்பனையாகிறது.

கடந்த 2023-ம் ஆண்டு கடுமையாக குறைந்த தங்கம் விலை, இஸ்ரேல், பாலஸ்தீன போர் எதிரொலியாக அதிகரித்தது. இதைத் தொடர்ந்து ஏற்ற, இறக்கமாக இருந்து வந்தது. இந்த வாரத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது.

இந்நிலையில் இன்று (ஏப்.18) சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8945-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு பவுன் ரூ.71,560-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை ஒரு கிரா ரூ.110-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,10,000-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது தொடர்பாக தங்க நகை வியாபாரிகள் கூறியதாவது: அமெரிக்கா – சீனா இடையேயான வர்த்தக போரில் அனைத்து நாடுகளும் சிக்கிக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே தங்கத்தின் விலை அதிகரிக்க தொடங்கிவிட்டது.

தற்போது வரை வர்த்தக போர் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லை. இதனால் பங்குச்சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது. அடுத்தடுத்த வாரங்களில் தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை. விரைவில் ஒரு பவுன் ரூ.80 ஆயிரத்தை தொடும்.

அதேநேரம், இருநாடுகளுக்கும் இடையேயான பரஸ்பர வரி விதிப்பு குறைக்கப்படாத பட்சத்தில் எண்ணி பார்க்க முடியாத அளவுக்கு விலை அதிகரிக்கக் கூடும். ஆண்டு இறுதிக்குள் ரூ.1 லட்சத்தை அடையவும் வாய்ப்பிருக்கிறது. தங்கம் உற்பத்தி எவ்வளவு அதிகரித்தாலும் விலை குறைய வாய்ப்பில்லை. தங்கத்தின் மீதான நம்பிக்கையில் மக்கள் நாணயத்தில் அதிக முதலீடு செய்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.



Read More

Previous Post

‘விக்கெட் கீப்பரின் பிழையால் பவுலருக்கு அநீதி’ – வருண் சக்கரவர்த்தி விரக்தி | Injustice to bowler due to wicketkeeper s mistake Varun Chakravarthy ipl 2025

Next Post

“சீனா மீதான வரிவிதிப்பு முடிவுக்கு வரக்கூடும், ஏனெனில்…” – ட்ரம்ப் விவரிப்பு | Trump signals tit-for-tat China tariffs may be near end

Next Post
“சீனா மீதான வரிவிதிப்பு முடிவுக்கு வரக்கூடும், ஏனெனில்…” – ட்ரம்ப் விவரிப்பு | Trump signals tit-for-tat China tariffs may be near end

“சீனா மீதான வரிவிதிப்பு முடிவுக்கு வரக்கூடும், ஏனெனில்...” - ட்ரம்ப் விவரிப்பு | Trump signals tit-for-tat China tariffs may be near end

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin