• Login
Monday, September 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலை இனி எகிற போகுது..!! டிரம்ப் வெளியிட்ட அந்த ஒரு அறிவிப்ப கவனிச்சீங்களா? | Gold Price Prediction: Will Trump’s Low-Interest-Rate Push Trigger a Gold Rally in India?

GenevaTimes by GenevaTimes
September 14, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் விலை இனி எகிற போகுது..!! டிரம்ப் வெளியிட்ட அந்த ஒரு அறிவிப்ப கவனிச்சீங்களா? | Gold Price Prediction: Will Trump’s Low-Interest-Rate Push Trigger a Gold Rally in India?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலை இனி எகிற போகுது..!! டிரம்ப் வெளியிட்ட அந்த ஒரு அறிவிப்ப கவனிச்சீங்களா?

உலகளவிலும் இந்தியாவிலும் தங்கம் விலை போக்கினை முடிவு செய்யும் காரணிகளில் முக்கியமானதாக இருக்கிறது அமெரிக்காவும் அமெரிக்க அரசின் கொள்கைகளும் தான். அந்த வகையில் தங்கம் விலையை உயர்த்தும் வகையிலான ஒரு கருத்தினை டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்கா தான் உலகிலேயே மிக குறைந்த வட்டி விகிதத்தை கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் வங்கி பணவீக்கம் மற்றும் பொருளாதார நிலைமை குறித்த தரவுகளை பற்றி கவலையை வெளிப்படுத்தினாலும், அமெரிக்கா தான் உலகின் குறைந்த வட்டி விகிதத்தை கொண்ட நாடாக இருக்க வேண்டும் என்பதில் தான் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார்.

தங்கம் விலை  இனி எகிற போகுது..!! டிரம்ப் வெளியிட்ட அந்த ஒரு அறிவிப்ப கவனிச்சீங்களா?

நாளை மற்றும் நாளை மறுதினம் அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் டிரம்பின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. மத்திய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. தற்போது வட்டி விகிதம் 3.5% முதல் 3.75% வரை உள்ள நிலையில் வட்டி விகிதங்களை மாற்றாமல் அதே அளவில் நீட்டிக்கவே வாய்ப்பு உள்ளதென சொல்லப்படுகிறது.

அமெரிக்காவின் இறக்குமதி வரி உயர்வு மற்றும் ஈரான் போர் காரணமாக அதிகரித்து வரும் எரிசக்தி விலைகள் பொருளாதாரத்தில் விலை அழுத்தத்தை இன்னும் அதிகரித்து வருகின்றன. பணவீக்கம் நீடித்தால் அது பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என ஃபெடரல் ரிசர்வ் அதிகாரிகள் கவலைப்படுகின்றனர். எனவே வட்டி விகிதத்தை உயர்த்துவது சரியாக இருக்கும் என கருதுகிறார்களாம்.

ஆனால் டிரம்போ வட்டியை உயர்த்த கூடாது மாறாக குறைக்க வேண்டும் என தொடர்ச்சியாக கூறி வருகிறார். இது நேரடியாக தங்கத்தின் விலையில் தான் தாக்கத்தை ஏற்படுத்தும். அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை குறைத்தால், அமெரிக்க டாலர் மற்றும் பத்திரங்களின் மீதான ஈர்ப்பு குறையும். இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது அதிகளவில் முதலீடு செய்வார்கள், இது தங்கத்தின் விலையை உயர செய்யும்.

அமெரிக்கா முதலீட்டாளர்கள், முதலீட்டு நிறுவனங்கள் டாலர் அடிப்படையிலான முதலீடுகளை கைவிட்டு தங்கத்தில் முதலீடு செய்தால் அதற்கு டிமாண்ட் அதிகரித்து தாறுமாறாக விலை உயரும். உலக சந்தையில் தங்கம் விலை உயர்ந்தால் இந்தியாவிலும் தங்கம் விலை உயரும்.

இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் என்பதால் ஏற்கனவே தங்கத்திற்கு டிமாண்ட் அதிகமாக இருக்கும் இதில் விலையும் உயர்ந்தால் வீட்டில் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை வைத்திருப்போருக்கு இன்னும் சிக்கலையும் கூடுதல் நிதி சுமையையும் ஏற்படுத்தும்.

இருந்தாலும் டிரம்ப் பேச்சை ஏற்று அமெரிக்க ஃபெடரல் வங்கி உடனே வட்டியை குறைக்காது என்றே நிபுணர்கள் கூறுகின்றனர். லேசாக வட்டி உயர்த்தப்படலாம் அல்லது வட்டி மாறாமல் இருக்கலாம் என்றும் கணிக்கின்றனர். இதில் எது நடந்தாலும் தங்கம் விலையில் கண்டிப்பான தாக்கத்தை ஏற்படுத்தும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Price Prediction: Will Trump’s Low-Interest-Rate Push Trigger a Gold Rally in India?

தங்கம் விலை இனி எகிற போகுது..!! டிரம்ப் வெளியிட்ட அந்த ஒரு அறிவிப்ப கவனிச்சீங்களா?/ US President Donald Trump has once again called for lower interest rates, saying the United States should have the lowest borrowing costs in the world.

Story first published: Monday, September 14, 2026, 8:20 [IST]

Read More

Previous Post

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி

Next Post

கோத்தா திங்கி அருகே இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி தம்பதி உட்பட மூவர் பலி! | Makkal Osai

Next Post
கோத்தா திங்கி அருகே இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி தம்பதி உட்பட மூவர் பலி! | Makkal Osai

கோத்தா திங்கி அருகே இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி தம்பதி உட்பட மூவர் பலி! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin