• Login
Wednesday, August 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலையை சரிவுக்கு தள்ளும் ஈரான்.. அமெரிக்கா சொன்னதை கேட்டீங்களா.. மக்களே உஷார்! | Gold Spot Price Drops Below $4,390 as Crude Oil Hits $92 and US Bond Yields Surge Amid US-Iran Standoff

GenevaTimes by GenevaTimes
August 18, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் விலையை சரிவுக்கு தள்ளும் ஈரான்.. அமெரிக்கா சொன்னதை கேட்டீங்களா.. மக்களே உஷார்! | Gold Spot Price Drops Below $4,390 as Crude Oil Hits $92 and US Bond Yields Surge Amid US-Iran Standoff
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலையை சரிவுக்கு தள்ளும் ஈரான்.. அமெரிக்கா சொன்னதை கேட்டீங்களா.. மக்களே உஷார்!

தங்கம் விலை சென்னை ரீடைல் சந்தையில் இன்று கிராமுக்கு 23 ரூபாய் உயர்ந்திருந்தாலும், சர்வதேச சந்தையில் பெரும் பாதிப்பை ஈரான் மூலம் எதிர்கொண்டுள்ளது. இதன் தாக்கம் அடுத்த 24 மணிநேரத்தில் இந்திய சந்தையில் எதிரொலிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது.

ஈரான் – அமெரிக்கா மத்தியிலான போர், அமைதி ஒப்பந்தத்தின் 60 நாள் காலக்கெடு முடிந்த நிலையில் புதிய ஒப்பந்தம், போர் நிறுத்தம் நீட்டிப்பு, பேச்சுவார்த்தை என எதுவும் நடக்காத காரணத்தால் முதலீட்டு சந்தையில் செயின் ரியாக்ஷன் நடந்து தங்கம் விலை சரிவுக்கு தள்ளியுள்ளது.

தங்கம் விலையை சரிவுக்கு தள்ளும் ஈரான்.. அமெரிக்கா சொன்னதை கேட்டீங்களா.. மக்களே உஷார்!

இன்று சர்வதேச ஸ்பாட் சந்தையில் ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை 4439 டாலரில் இருந்து 4389 டாலர் வரையில் குறைந்துள்ளது. இதன் மூலம் 0.65 சதவீதம் வரையில் தங்கம் விலை குறைந்துள்ளது, மேலும் தங்கம் விலை தொடர்ந்து 0.4-0.5 சதவீதம் வரையிலான சரிவில் தொடர்ந்து இருந்து வருகிறது.

சர்வதேச சந்தையில் இன்று தங்கம் விலை சரிவுக்கு அடிப்படை காரணம் ஈரான் போர் விவகாரமாக இருந்தாலும், இதற்கான காரணியாக இருப்பது கச்சா எண்ணெய் விலை உயர்வு. கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் சந்தையில் இன்று ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 92 டாலரை தொட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் WTI கச்சா எண்ணெய் 85 டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

இதேவேளையில் அமெரிக்க அரசு பத்திர முதலீடுகள் மீதான லாபமும் பெரிய அளவில் உயர்ந்துள்ளதால் டாலருக்கான டிமாண்ட் மீண்டும் உயர்ந்து இதன் மதிப்பும் உயர்ந்து வருகிறது. இவை அனைத்தும் தங்கம் விலை சரிவுக்கு முக்கிய காரணியாக இருந்து வருகிறது.

அடுத்தாக அமெரிக்க அதிபர் டிரம்ப், அந்நாட்டில் இருக்கும் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் உற்பத்தியை மேம்படுத்த உத்தரவிட்டு உள்ளார். இதன் மூலம் ஈரான் உடன் போருக்கு விரைவாக தீர்வு காணப்படாது என்பது கிட்டத்தட்ட தெளிவாகியுள்ளது, இல்லையெனில் இது பெரும் போருக்கான ஆயத்தப்பணிகளைவும் எடுத்துக்கொள்ள முடியும். இதுதான் அனைத்து முதலீட்டாளர்களும் கவனிக்க கூடியதாக உள்ளது.

இவை இரண்டும் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. அடுத்த முக்கிய விஷயமாக அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ்-ன் நாணய கொள்கை கூட்டத்தின் முடிவுகள் குறித்த விரிவான தரவுகள் வெளியாக உள்ளது. இது தங்கம் விலையை நிர்ணயம் செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது.

தற்போது கச்சா எண்ணெய் விலை 92 டாலருக்கு உயரும் வேளையில் பணவீக்க அச்சம் அதிகரித்து வட்டி விகிதம் உயர்த்தப்படுமாயின், இதுவும் தங்கம் விலை உயர்வுக்கு எதிராக அமையும்.

இப்படி பல காரணிகள் அடுத்தடுத்து தங்கம் விலையை பாதிக்க உள்ள காரணத்தால் இந்த வாரம் முழுவதும் மிகவும் முக்கியமான காலக்கட்டமாக பார்க்கப்படுகிறது. இதேவேளையில் ஈரான் உடனான அமெரிக்காவின் போர் சுமுகமாக முடிந்தால் கட்டாயம் தங்கம் விலை உயர துவங்கும்.

Share This Article

English summary

Gold Spot Price Drops Below $4,390 as Crude Oil Hits $92 and US Bond Yields Surge Amid US-Iran Standoff

Gold Spot Price Drops Below $4,390 as Crude Oil Hits $92 and US Bond Yields Surge Amid US-Iran Standoff — தங்கம் விலையை சரிவுக்கு தள்ளும் ஈரான்.. அமெரிக்கா சொன்னதை கேட்டீங்களா.. மக்களே உஷார்! — Why Gold Prices Are Facing Downward Pressure: Brent Crude Surge and Fed Policy Expectations Impact Precious Metals

Story first published: Tuesday, August 18, 2026, 13:42 [IST]

Other articles published on Aug 18, 2026

Read More

Previous Post

14 மாநில முதலமைச்சர்கள் மீது குற்ற வழக்குகள்.. பட்டியலில் யார், யார் இருக்கின்றனர்..? வெளியான அறிக்கை!

Next Post

GE16-ஐக் கருத்தில் கொண்டு DAP அரசாங்கத்தில் நீடிக்கிறது என்கிறார் ஆய்வாளர்

Next Post
GE16-ஐக் கருத்தில் கொண்டு DAP அரசாங்கத்தில் நீடிக்கிறது என்கிறார் ஆய்வாளர்

GE16-ஐக் கருத்தில் கொண்டு DAP அரசாங்கத்தில் நீடிக்கிறது என்கிறார் ஆய்வாளர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin