தங்கத்தை விட வெள்ளி விலை வேகமாக உயர்ந்து வரும் சூழலில், இப்போது வெள்ளியில் முதலீடு செய்யலாமா? என்பதை பார்க்கலாம்.
சர்வதேச அளவில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதார சூழலால், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அதைப் போல, வெள்ளியின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், குறைந்த முதலீட்டை வைத்திருப்பவர்கள், தங்கத்திற்கு பதிலாக வெள்ளியில் முதலீடு செய்யலாமா? என்று யோசித்து வருகின்றனர்.
இந்தியாவில் தங்கத்தின் விலை யாரும் எதிர்பார்க்காத வகையில் 20% வரை உயர்ந்துள்ளது. அதேபோல், வெள்ளி விலையும் உயர்ந்து, ஒரு கிலோ ஒரு லட்சத்தை தாண்டி, தற்போது சற்று கீழே இறங்கியுள்ளது. இருப்பினும், சர்வதேச சந்தையில் நிலவும் அசாதாரண சூழலால், வெள்ளி விலை தொடர்ந்து உயரும் என்றே பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக, தங்கத்தை காட்டிலும் வெள்ளி பல்வேறு தொழில்துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சோலார் பேனல், எலக்ட்ரிக் வாகனங்கள் உள்பட பலவற்றில் வெள்ளியின் பயன்பாடு இருப்பதால், அதன் தேவை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
எனவே, நீண்ட காலத்தின் அடிப்படையில் வெள்ளியின் விலை அதிகரிக்கும் என்பதோடு, குறுகிய மற்றும் நடுத்தர கால அடிப்படையிலும் வெள்ளியில் முதலீடு செய்யலாம் என்கிறார்கள். குறிப்பாக, தொழில்துறை தேவைகள் வேகமாக வளர்ந்து வருவதால், வரும் ஆண்டுகளில் தங்கத்தை விட, வெள்ளியின் தேவையே அதிகமாக இருக்கும் என்பதால், அதில் முதலீடு செய்வது கூடுதல் லாபத்தை தரும் என்றும் கணித்துள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)