இந்தாண்டு தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் உச்சத்தை தொட்டு வருகின்றன. இதனால் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தங்கத்தை புகலிடமாக கருதிய முதலீட்டாளர்கள் தற்போது, வெள்ளியையும் பாதுகாப்பான முதலீடாக கருதி முதலீடு செய்ய தொடங்கியுள்ளனர். மறுபுறம், தங்கத்திற்கான மதிப்பும் குறையாமல் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், தற்போது சந்தையில் தாமிரம் அல்லது செம்பு (copper) விற்பனை உயர்ந்து வருகிறது. தாமிர விலைகள் சமீபத்தில் சடுதியாக உயர்ந்துள்ளன. அமெரிக்காவிற்கு வெளியே தேவை அதிகரித்து வருவதாலும், விநியோக கவலைகள் தீவிரமடைவதாலும் தாமிரத்தின் விலை டன்னுக்கு $12,000ஐ நெருங்கி வருகிறது. அந்த வகையில், 2025ல் இதுவரை தாமிரத்தின் விலை சுமார் 35% உயர்ந்துள்ளது.


