ராமேஸ்வரத்தில் விலையுயர்ந்த தக்காளியின் விலை கிலோ ரூ.100 வரையிலும் விற்கப்படுவதால் தக்காளி வாங்க ஆர்வம் காட்டாமல் கால்கிலோ, அரைகிலோ என வாங்கி செல்லும் பொதுமக்கள். மொத்த வியாபாரிகள் தட்டுபாட்டினை ஏற்படுத்தி விலை உயர் வைப்பதால் போதிய வியாபாரம் இல்லையென தெரிவித்த வியாபாரிகள்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ரூ.30 முதல் ரூ.40 வ வரை விற்று வந்த தக்காளியின் விலை தற்போது இந்த மாத தொடக்கத்தில் இருந்து படிப்படியாக விலை உயர்ந்து ரூ.80 முதல் ரூ.120 வரையிலும் விற்க்கப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரி கார்த்திக் கூறுகையில், கடந்த மூன்று மாதங்களாக அனைத்து காய்கறிகளும் கோடை வெயிலினால் விளைச்சல் பாதிப்படைந்து அதிகமான விலைக்கு விற்பனையானது. பிறகு படிப்படியாக குறைந்து சீரான விலைக்கு வந்தது. ஆனால் தக்காளியினுடைய விலை மட்டும் குறையாமல் படிப்படியாக உயர்ந்து, கிலோ ரூ.30-க்கு விற்க்கப்பட்ட தக்காளி கடந்த வாரம் கிலோ ரூ.120, ரூ.100 என விற்பனை செய்யப்பட்டு இன்று கிலோ ரூ.80 என்ற நிலையில் விலை அதிகமாக உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மதுரை மாவட்டத்தில் இருந்து வருகிறது. மதுரைக்கு ஆந்திரா போன்ற பகுதிகளில் இருந்து வருகிறது. அங்குள்ள மொத்த வியாபாரிகள் தக்காளியினை பதுக்கி வைத்து தட்டுப்பாடு ஏற்படுத்தி விலை உயரச்செய்து அதிக லாபம் அடைகின்றனர்.
இதனால் தினசரி மார்க்கெட்களில் கடை நடத்தும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் விலை உயர்வால் பாதிப்படைந்து, விலை குறைவாக இருந்த நேரத்தில் 1 கிலோ, 2 கிலோ என வாங்கி சென்றனர். தற்போதுள்ள விலை உயர்வு காரணமாக அரைகிலோ, கால்கிலோ என வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. வரும் நாட்களில் தக்காளியின் விலை ரூ.200 வரை அதிகரிக்க கூடும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
