• Login
Thursday, August 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கத்தை இனி பூட்டி வைப்பது வேஸ்ட்.. பாரம்பரியத்தை உடைக்கும் ஜென்Z.. உலக தங்க கவுன்சில் சொன்ன விஷயம்! | Gen Z Breaks India’s Gold Tradition: World Gold Council Reveals Shift from Jewellery to Digital & ETFs

GenevaTimes by GenevaTimes
August 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கத்தை இனி பூட்டி வைப்பது வேஸ்ட்.. பாரம்பரியத்தை உடைக்கும் ஜென்Z.. உலக தங்க கவுன்சில் சொன்ன விஷயம்! | Gen Z Breaks India’s Gold Tradition: World Gold Council Reveals Shift from Jewellery to Digital & ETFs
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கத்தை இனி பூட்டி வைப்பது வேஸ்ட்.. பாரம்பரியத்தை உடைக்கும் ஜென்Z.. உலக தங்க கவுன்சில் சொன்ன விஷயம்!

இந்திய மக்களுக்கும், தங்கத்திற்கும் இருக்கும் பந்தம் மிகவும் முக்கியமானது, ஆனால் ஜென்Z தலைமுறையினர் இந்த பந்தத்தை உடைக்கும் வகையில் புதிய மாற்றத்தை நோக்கி ஓடிக்கொண்டு இருப்பதாக உலக தங்க கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தியர்களுக்கு தங்கம் என்பது நகை, சேமிப்பு, நீண்ட கால திட்டத்திற்கான முதலீடு, வீட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வுக்கும் வாங்கும் தங்க நகையை ஒரு நினைவாக பாதுகாத்து வரும் வழக்கத்தை கொண்டு உள்ளனர். ஆனால் ஜென்Z தலைமுறையினருக்கு தங்கம் வெறும் தலைமுறைகளை கடந்து வரும் ஒரு சொத்தாகவே பார்க்கின்றனர்.

தங்கத்தை இனி பூட்டி வைப்பது வேஸ்ட்.. பாரம்பரியத்தை உடைக்கும் ஜென்Z.. உலக தங்க கவுன்சில் சொன்ன விஷயம்!

எப்படி வீடு, நிலம் போன்றவை தலைமுறை கடந்து வருகிறதோ அதேபோலவே தங்கத்தையும் பார்க்க துவங்கியுள்ளனர். இதனால் ஜென்Z தலைமுறையினருக்கு தங்கம் மீதான எமோஷனல் கனெக்ஷன் குறைந்துள்ளது.

இத்தலைமுறையினர் தங்கத்தை நகைகளாக அல்லாமல் மாற்று வழியில் நுகர்வு செய்ய துவங்கியுள்ளனர். இதைதான் உலக தங்க கவுன்சில் அறிக்கையில் இந்தியாவின் அடுத்த Gold Boom நகைகளின் விற்பனையால் நடக்காது, தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவை, புதிய தலைமுறை முதலீட்டு திட்டங்களால் மட்டுமே உந்தப்படும்.

அதாவது ஈடிஎப், டிஜிட்டல் கோல்டு, கோல்டு பீஸ், நகை கடைகள் மற்றும் தங்க சத்திகரிப்பு நிறுவனங்களின் பங்குகள் என மாற்றுப்பட்ட வகையில் தங்கத்தை ஜென்Z தலைமுறையினர் நகர்ந்து வருகிறார்கள்.

இந்த மாற்றத்திற்கு முக்கியமான காரணம் தங்கம் விலை உயர்வு தான், 3-4 வருடத்திற்கு முன்பு ஒரு பவுன் தங்கத்தை 60000-70000 ரூபாய்க்கு வாங்க முடியும், இன்று 1 லட்சம் வரையில் விற்கப்படுகிறது.

இதனால் நாட்டில் பெரும் பகுதி மக்கள் தங்கத்தை குறைந்த விலையில் வாங்குவதற்கான வாய்ப்பை தேடி ETF, டிஜிட்டல் கோல்டு போன்றவற்றின் மூலம் வாங்குகிறார்கள்.

இதன் வாயிலாக தங்கத்தில் முதலீடு செய்வதன் மூலம் கிடைத்தாலும், நீண்ட கால அடிப்படையில் தங்கத்தை கையில் வைத்திருப்பதன் வாயிலாக கிடைக்கும் காம்போடிங் லாபம் பெறுவதை பலர் தங்களுடைய முதலீடுகளை குறுகிய காலத்தில் விற்பனை செய்வதன் மூலம் இழக்கிறார்கள்.

அடுத்தாக இந்திய மக்களிடம் சுமார் 31000 டன் தங்கம் உள்ளது, இதன் மதிப்பு மட்டும் 315 லட்சம் கோடி ரூபாய். இத்தகைய பெரும் செல்வத்தை இந்திய மக்கள் தங்க வீட்டு பீரோவில் பூட்டி வைத்துவைத்துள்ளனர். இதனால் எந்த பயணம் நாட்டிற்கும், நாட்டு பொருளாதாரத்திற்கும் இல்லை என பொருளாதார வல்லுனர்கள் தொடர்ந்து கூறுகின்றனர்.

உலக தங்க கவுன்சில் தகவல் படி 1997 முதல் 2012 வரையில் பிறந்த ஜென்Z தலைமுறையினர் வீட்டில் இருக்கும் தங்கத்தை புதிய நிதி ஆதாரமாக பார்க்க துவங்கியுள்ளனர். மத்திய அரசின் தங்க பணமாக்கும் திட்டம், தங்க கடன் என பல வகையில் தங்கத்தை நிதி ஆதாரமாக மாற்றி வருகின்றனர்.

இந்தியாவில் மொத்த தங்க கடன் மதிப்பு மட்டும் சுமார் 5.1 லட்சம் கோடி, இதில் NBFC-க்களின் பங்கீடு 3.3 லட்சம் கோடியாக உள்ளது. இதன் மூலம் தங்கத்தை பணமாக்குவதில் மக்கள் மிகவும் ஆர்வமாக உள்ளது உறுதியாகியுள்ளது.

இன்னும் சொல்லப்போனால் ஜென்Z தலைமுறையினர் தற்போது தங்க நகை வாங்குவதில் கூட அதிகப்படியான ஆன்லைன் ரிசர்ச் செய்யும் காரணத்தால் இத்தலைமுறையினரை கவரும் வகையில் சிறப்பான டிசைன், குறைந்த விலை, ஈஎம்ஐ ஆப்ஷன் என பல வகையில் நகை கடைகளும் மாறி வருகிறது.

காரணம் 2035ஆம் ஆண்டுக்குள் இந்த ஜென்Z தலைமுறையினர்-யின் Purchasing Power 2 டிரில்லியன் டாலரும். இந்த பவர் தான் நாட்டின் மொத்த தங்க நுகர்வு சந்தையை தலைகீழாக மாற்றப்போகிறது.

இப்படி ஜென்Z தலைமுறையினர் தங்கத்தை வாங்குவது, சேமிப்பதில் துவங்கி முதலீடு, பணமாக்குவது வரையில் பல மாற்றங்களை செய்து வருகின்றனர். இதேபோல் வங்கிகள், நிதி நிறுவனங்கள் அனைத்தும் தற்போது வீடுகளில் பூடிக்கிடக்கும் 31000 டன் தங்கத்தை எப்படி சந்தைக்கு கொண்டு வருவது என்பதில் தான் தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர். இதற்கு ஜென்Z தான் முக்கிய உந்து கோலாக இருக்கப்போகிறார்கள்.

Share This Article

English summary

Gen Z Breaks India’s Gold Tradition: World Gold Council Reveals Shift from Jewellery to Digital & ETFs

Gen Z Breaks India’s Gold Tradition: World Gold Council Reveals Shift from Jewellery to Digital & ETFs — தங்கத்தை இனி பூட்டி வைப்பது வேஸ்ட்.. பாரம்பரியத்தை உடைக்கும் ஜென்Z.. உலக தங்க கவுன்சில் சொன்ன விஷயம்!

Story first published: Wednesday, August 5, 2026, 16:52 [IST]

Other articles published on Aug 5, 2026

Read More

Previous Post

டியுஷன் பணத்தில் மதுவை சுமந்த மாணவன்

Next Post

காசா: 3 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட 112 சடலங்கள்… உருக்கமான முறையில் உறவினர்கள் படைசூழ நல்லடக்கம்! | #Video | Gaza | World News (உலக செய்திகள்)

Next Post
காசா: 3 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட 112 சடலங்கள்… உருக்கமான முறையில் உறவினர்கள் படைசூழ நல்லடக்கம்! | #Video | Gaza | World News (உலக செய்திகள்)

காசா: 3 ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட 112 சடலங்கள்... உருக்கமான முறையில் உறவினர்கள் படைசூழ நல்லடக்கம்! | #Video | Gaza | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin